Nenjuku Needhi

கேன்ஸ் திரைப்பட விழாவில் தீபிகா படுகோனே.. புதிய பேஷன் ஸ்டைலில் அசத்தல்! வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேன்ஸ் திரைப்பட விழாவில் இருந்து நடிகை தீபிகா படுகோனே தனது பேஷன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

DEEPIKA PADUKONE CANNES FILM FESTIVAL NEW FASHION VIRAL IMAGES

2017 முதல் கேன்ஸ் திரைப்பட விழாவில் தீபிகா படுகோன் கலந்துகொண்டு வருகிறார். ஐஸ்வர்யா என்ற கன்னடப் படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய தீபிகா படுகோன், 2007 இல் ஷாருக்கான் நடித்த 'ஓம் சாந்தி ஓம்' இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

DEEPIKA PADUKONE CANNES FILM FESTIVAL NEW FASHION VIRAL IMAGES

பின்னர், சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் மற்றும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலா மற்றும் மறைந்த இர்ஃபான் கான் மற்றும் அமிதாப் பச்சனுடன் பிகு, ரன்பீர் கபூருடன் YJHD, தமாஸா ஆகிய படங்களின் மூலம் இந்தி சினிமாவில் உச்ச நிலையை அடைந்தார். ஹாலிவுட் படமான XXX: Return of Xander Cage படத்திலும் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

DEEPIKA PADUKONE CANNES FILM FESTIVAL NEW FASHION VIRAL IMAGES

இந்தாண்டு கேன்ஸ் பட விழா நடுவர் குழுவில் உலக சினிமா பிரபலங்கள் ஆன ஐந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் உள்ளனர், இந்த 9 பேர் இந்தாண்டுக்கான பாம் டி'ஓர் விருதுகளின் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். தற்போது நடைபெறும் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர் குழுவின் தலைவராக பிரெஞ்சு நடிகர் வின்சென்ட் லிண்டன் இருப்பார்.

DEEPIKA PADUKONE CANNES FILM FESTIVAL NEW FASHION VIRAL IMAGES

ஜூரியில் தீபிகாவுடன் இணைந்து நடிகர்-இயக்குனர் ரெபேக்கா ஹால், நூமி ராபேஸ் மற்றும் இத்தாலிய நடிகர்-இயக்குனர் ஜாஸ்மின் டிரின்கா மற்றும் இயக்குநர்கள் அஸ்கர் ஃபர்ஹாடி, லாட்ஜ் லை, ஜெஃப் நிக்கோல்ஸ் மற்றும் ஜோச்சிம் ட்ரையர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆண்டுக்கான வெற்றியாளர்களை மே 28 ஆம் தேதி கேன்ஸில் நடைபெறும் விழாவில் நடுவர் குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ள தொடங்கியுள்ளனர். முதல் நாள் விழாவில் நடிகை தீபிகா படுகோனே, நடுவர் குழுவுடன் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டார். கருப்பு நிற சேலையில் தீபிகா தோன்றினார்.

DEEPIKA PADUKONE CANNES FILM FESTIVAL NEW FASHION VIRAL IMAGES

இரண்டாவது நாளில் சிவப்பு நிற உடையிலும், மூன்றாவது நாளில் கருப்பு நிற உடையிலும் தோன்றினார். இந்நிலையில் கேன்ஸ் விழாவில் இருந்து புகைப்படங்களையும், போட்டோக்களையும் தீபிகா படுகோன் வெளியிட்டுள்ளார். 

 

 

 

 

 

தொடர்புடைய இணைப்புகள்

DEEPIKA PADUKONE CANNES FILM FESTIVAL NEW FASHION VIRAL IMAGES

People looking for online information on Deepika Padukone will find this news story useful.