Nenjuku Needhi

The wait is over… விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ பட ரிலீஸ் எப்போது… வெளியான official அறிவிப்பு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.

Vikram cobra movie official release date announced

Also Read | ‘நெஞ்சுக்கு நீதி’ எப்படி இருக்கு… படம் பார்த்துட்டு கீர்த்தி சுரேஷ் போட்ட Tweet – Viral pic

Long waiting கோப்ரா

விக்ரம் நடிப்பில் மகான் திரைப்படத்தின் ரிலீஸூக்கு பிறகு தற்போது கோப்ரா திரைப்படம் உருவாகி ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

Vikram cobra movie official release date announced

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

கோப்ரா ரிலீஸ் தகவல்கள்…

கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக நாம் முன்பே அறிவித்திருந்தோம். ஆகஸ்ட் 15, சுதந்திர தினம் வரை தொடர் விடுமுறை தினங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்று  கோப்ரா ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

Vikram cobra movie official release date announced

வெளியான வீடியோ…

இந்நிலையில் தற்போது அறிவித்தபடி கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி ஒரு மோஷன் வீடியோவோடு வெளியாகியுள்ளது. எதிர்பார்த்தது போலவே கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்ரா திரைப்படம் ரிலீஸாவது விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து இரு படங்கள் ரிலீஸாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram cobra movie official release date announced

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Vikram cobra movie official release date announced

People looking for online information on Cobra movie, Cobra Movie Release Updates, Vikram, Vikram cobra movie, Vikram Cobra movie updates will find this news story useful.