லிங்குசாமி இயக்கும் புதிய ஆக்சன் திரைப்படம்.. மிரட்டலான டீசர் எப்போ? வேற லெவல் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தின் புதிய அப்டேட் வெளியானது.

Lingusamy RAPO The Warriorr Teaser will be out on May 14

Also Read | BREAKING: 'சியான்' விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் #CHIYAAN61.. படத்துக்கு பேரு இதுவா? போடு வெடிய

முன்னதாக RAPO19 என அழைக்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு சமீபத்தில்  அசத்தலான ஸ்டைலில் வெளியிடப்பட்டது. ராம் பொதினேனி போலீஸ் அதிகாரியாக துப்பாக்கி ஏந்தியபடி கடுமையான தோற்றத்துடன், அவரைச் சூழ்ந்திருக்கும் போலீஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ள போஸ்டருடன், படத்தின் தலைப்பு “தி வாரியர்” என வெளியிடப்பட்டது.

“தி வாரியர்” படத்தின் டீசர் அப்டேட்டை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. அதன் படி படத்தின் டீசர் மே மாதம் 14 ஆம் தேதி, மாலை 5.31 மணிக்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதற்காக பிரத்யேக போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Lingusamy RAPO The Warriorr Teaser will be out on May 14

நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார், தென்னிந்திய திரையுலகின்  இளம் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.  மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு, படத்தின் நாயகி கீர்த்தி  ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது. அதில் அவர் விசில் மகாலட்சுமியாக நவநாகரீக தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். சமீபத்தில், மகா சிவராத்திரி தினத்தில், ஆதியின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த படத்தில் அக்‌ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Lingusamy RAPO The Warriorr Teaser will be out on May 14

“தி வாரியர்” திரைப்படம்,  வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில்  பிரமாண்டமாக வெளியாகிறது. ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ள இந்த அதிரடி திரைப்படத்தை பவன் குமார் வழங்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுஜித் வாசுதேவ் செய்கிறார்.

Lingusamy RAPO The Warriorr Teaser will be out on May 14

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

லிங்குசாமி இயக்கும் புதிய ஆக்சன் திரைப்படம்.. மிரட்டலான டீசர் எப்போ? வேற லெவல் அப்டேட் வீடியோ

Lingusamy RAPO The Warriorr Teaser will be out on May 14

People looking for online information on Lingusamy, The Warriorr Movie, The Warriorr Movie updates, The Warriorr Teaser will find this news story useful.