www.garudabazaar.com

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் ராம் பொத்தினேனி - லிங்குசாமி படத்தின் இன்னொரு "மாஸ்" அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில், தமிழ் தெலுங்கு என இருமொழியில் உருவாகும் பெயரிடப் படாத திரைப்படம்‘RAPO19’.

Aditya Music bagged Ram Pothineni Lingusamy RAPO19 audio rights

உஸ்தாத் ராம் பொத்தினேனி ஏற்கனவே ‘Ready’ மற்றும்  iSmart Shankar போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களில் நடித்து முன்னணி மாஸ் நடசத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் தமிழ் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். வில்லனாக தமிழ் & தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் ஆதி நடிக்கிறார்.

தவிர, அக்ஷரா கௌடா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்துக்கு, பல ப்ளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இதனால் இப்படத்தின் ஆல்பம் மீதான எதிர்பார்ப்புகள் மிகப்பெரியதாக உள்ளது. இந்நிலையில்தான், எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு இசை உரிமையை, Aditya Music நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  தென்னிந்திய இசையுலகில் முன்னணி வகிக்கும் Aditya Music நிறுவனம், இப்படத்தின் இசை உரிமையை கைப்பற்றியிருப்பதால், படத்துக்கு மேலும் பலம் கூடியுள்ளது.

Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் ஶ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த படத்தில் சம்பந்தப்பட்ட மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றிய விவரங்களை தயாரிப்பாளர்கள் விரைவில் வெளியிடுவார்கள்.

Also Read: "தமது பட இயக்குநருடன்" 2-வது முறையாக அதர்வா இணையும் படத்துக்கு இப்படி ஒரு டைட்டிலா?

Aditya Music bagged Ram Pothineni Lingusamy RAPO19 audio rights

People looking for online information on Lingusamy, Ram Pothineni will find this news story useful.