Yaanai

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் "தி வாரியர்".. பட டிரெய்லர் ரிலீஸ் எப்போ? தெறி அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தின் டிரெய்லர் அப்டேட் வெளியாகி உள்ளது.

Lingusamy RAPO The Warriorr Movie Trailer Release Update

Also Read | 'விக்ரம்' படத்தின் OTT ரிலீஸ்.. ப்ரோமோ வீடியோவை இயக்குனது இந்த பிரபலமா? முழு தகவல்

முன்னதாக RAPO19 என அழைக்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு சமீபத்தில்  அசத்தலான ஸ்டைலில் வெளியிடப்பட்டது.

ராம் பொதினேனி போலீஸ் அதிகாரியாக துப்பாக்கி ஏந்தியபடி மாஸ் தோற்றத்தில் அவரைச் சூழ்ந்திருக்கும் போலீஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ள போஸ்டருடன், படத்தின் தலைப்பு “தி வாரியர்” என வெளியிடப்பட்டது.

Lingusamy RAPO The Warriorr Movie Trailer Release Update

நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார், தென்னிந்திய திரையுலகின்  இளம் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.  மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு, படத்தின் நாயகி கீர்த்தி  ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது. அதில் அவர் விசில் மகாலட்சுமியாக நவநாகரீக தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார்.

மகா சிவராத்திரி தினத்தில், ஆதியின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த படத்தில் அக்‌ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் நாளை ஜூலை 1 ஆம் தேதி இரவு 7:57 மணிக்கு வெளியாக உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் பிரத்யேக போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Lingusamy RAPO The Warriorr Movie Trailer Release Update

“தி வாரியர்” திரைப்படம்,  வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில்  பிரமாண்டமாக வெளியாகிறது. ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ள இந்த அதிரடி திரைப்படத்தை பவன் குமார் வழங்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுஜித் வாசுதேவ் செய்கிறார்.

இந்தப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பவன் குமாரின் ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.

Also Read | இந்தியாவுக்கு வெளியே 'விக்ரம்' படம் இந்த OTT -ல தான் ரிலீஸ்! முழு தகவல்

Lingusamy RAPO The Warriorr Movie Trailer Release Update

People looking for online information on Lingusamy, The Warriorr Movie, The Warriorr Movie Trailer Release, The Warriorr Movie Trailer Release Update will find this news story useful.