o2

'ஜெய்பீம்' வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுடன் அடுத்த படம்.. வெளியான EXCLUSIVE அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆனது.

Suriya Next Movie Director Ta Se Gnanavel Behindwoods Gold Medal Exclusive

Also Read | விக்ரம் படத்தின் 25வது நாள்.. லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட இதுவரை காணாத மாஸ் போஸ்டர்!

'ஜெய் பீம்' திரைப்படம், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்  தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கினார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்திருந்தார் சூர்யா.

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவானது. ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டராக ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் ஆகியோர் பணியாற்றினர்.

Suriya Next Movie Director Ta Se Gnanavel Behindwoods Gold Medal Exclusive

இப்படத்தினை சூர்யா &  ஜோதிகா தயாரிக்க, ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி கடந்த மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஜெய் பீம் படத்திற்காக மணிகண்டன், லிஜோமோல், ஞானவேல் ஆகியோருக்கு Behindwoods Gold Medal விருது வழங்கப்பட்டது.

Suriya Next Movie Director Ta Se Gnanavel Behindwoods Gold Medal Exclusive

இந்நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் விருது விழாவில் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா அடுத்து ஒரு படம் நடிப்பார் என 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன் அறிவித்துள்ளார். எதற்கும் துணிந்தவன் படத்தில் கடைசியாக நடித்த சூர்யா, அடுத்து பாலா இயக்கத்தில் நடித்துவருகிறார். இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படம் உருவாக உள்ளது.

Suriya Next Movie Director Ta Se Gnanavel Behindwoods Gold Medal Exclusive

இந்த விருது நிகழ்வில் வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.

இது சம்மந்தமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Also Read | வெங்கட் பிரபு இயக்கும் புதிய பட பூஜை.. யார் யாரெல்லாம் வந்திருக்காங்கனு பாருங்க! வைரல் PHOTOS

'ஜெய்பீம்' வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவுடன் அடுத்த படம்.. வெளியான EXCLUSIVE அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Next Movie Director Ta Se Gnanavel Behindwoods Gold Medal Exclusive

People looking for online information on Behindwoods Gold Medal Awards, BGM 2022, Director Ta Se Gnanavel, Suriya, Suriya Next Movie, Ta Se Gnanavel will find this news story useful.