யோகி பாபுவின் படத்துக்காக பாடகராக களமிறங்கும் கௌதம் மேனன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 08, 2019 11:23 AM
'கோமாளி' படத்துக்கு பிறகு வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் படம் 'பப்பி'. இந்த படத்தை புதுமுக இயக்குநர் மொரட்டு சிங்கிள் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, வருண் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் உயிரே வா என்ற பாடலை இயக்குநர் கௌதம் மேனன் பாடியுள்ளார். இந்த பாடல் குறித்து இய்ககுநர் முரட்டு சிங்கிள், கௌதம் மேனனின் குரலில் அழகான பாடலாக உருவாகியுள்ளது. இந்த படம் அக்டோபர் 11 முதல் வெளியாகவுள்லது என்று குறிப்பிட்டுள்ளார்.
யோகி பாபுவின் படத்துக்காக பாடகராக களமிறங்கும் கௌதம் மேனன் வீடியோ
Tags : Yogi Babu, Varun, Samyuktha Hegde, Gautham Vasudev Menon, Puppy