RRR Others USA
www.garudabazaar.com

லட்சுமி, ஹேமா எடுத்த முடிவு.. உற்சாகத்தில் கண்ணம்மா ரசிகர்கள்.. "என்ன ஒரு கண் கொள்ளா காட்சி.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான 'பாரதி கண்ணம்மா' அசத்தலான பாதையில் தற்போது சென்று கொண்டிருக்கிறது.

lakshmi and hema new promo makes barathi kannamma fans emotional

அது மட்டுமில்லாமல், ப்ரோமோக்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களும் அதிகம் உள்ளனர்.

அந்த வகையில், பாரதி கண்ணம்மாவின் புதிய ப்ரோமோ ஒன்று, அதிக நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமி மற்றும் ஹேமா

பாரதி கண்ணம்மா தொடரில், நாயகன் மற்றும் நாயகியான பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர், பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு பிறந்த குழந்தைகள் தான் லட்சுமி மற்றும் ஹேமா ஆகியோர். இதில் லட்சுமி, கண்ணம்மாவிடம்  வளர்ந்து வருகிறார். இன்னொரு குழந்தையான ஹேமா, பாரதியிடம் தத்துப் பிள்ளையாக வளர்ந்து வருகிறார்.

தந்தை யார்?

இதனைத் தொடர்ந்து, கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமிக்கு தன்னுடைய தந்தை யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் உருவாகியது. இதற்காக, தனக்கு கிடைத்த ஆதாரம் ஒன்றுடன் தந்தையைத் தேடி செல்கிறார் லட்சுமி. தனக்குக் கிடைத்த முகவரியின் அடிப்படையில், பாரதி வீட்டிற்கு லட்சுமி செல்ல, பாரதி தான் தன்னுடைய தந்தை என்ற உண்மை, தெரிய வரவே அவர் ஆனந்த கண்ணீரும் வடிக்கிறார்.

lakshmi and hema new promo makes barathi kannamma fans emotional

தந்தை என அழைக்க ஏக்கம்

இதனைத் தொடர்ந்து, தந்தை பாரதியை தேடி, மருத்துவமனை செல்லும் லட்சுமிக்கு பாரதி சோறு ஊட்டி விடவும் செய்கிறார். இத்தனை நாட்கள் அப்பா யார் என்பது தெரியாமல் இருந்த லட்சுமிக்கு, தற்போது அது யார் என்பது தெரிய வந்ததும், அவரின் அருகே மட்டும் இருக்க வேண்டும் என துடிக்கிறார். ஆனாலும், அப்பா என அழைக்க முடியாத லட்சுமியின் ஏக்கம், பார்ப்போரையும் ஏங்க வைத்துள்ளது.

lakshmi and hema new promo makes barathi kannamma fans emotional

அக்கா - தங்கை

இந்நிலையில், புதிய ப்ரோமோ ஒன்று, பாரதி கண்ணம்மா ரசிகர்களை அதிக உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பள்ளிக்கூடத்தில் வைத்து, ஹேமாவிடம் பேசும் லட்சுமி, இனி நீ என் தங்கை என கூறுகிறார். இதனைக் கேட்டதும் ஆச்சரியத்தில் உறைந்து போகிறார் ஹேமா. இத்தனை நாட்கள் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் லட்சுமி, தற்போது தங்கை என கூறியதால், ஹேமாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆனந்த கண்ணீரில் பாட்டி

அது மட்டுமில்லாமல், இதனை தூரத்தில் இருந்தே கேட்டுக் கொண்டே வரும் பாரதியின் தாயாரும், மகிழ்ச்சி அடைகிறார். தொடர்நது, ஹேமாவின் தோள் மேல் கை போட்டபடி நிற்கும் லட்சுமி, பாட்டியிடம், "ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி மாதிரியா இருக்கோம்?" என கேட்கிறார்.

lakshmi and hema new promo makes barathi kannamma fans emotional

இதனைக் கேட்டதும், பாட்டிக்கு ஆனந்த கண்ணீர் வர, "ஆமாம்" என்றும் சொல்கிறார். உண்மையில் இருவரும் அக்கா தங்கச்சி என்றாலும், அதனை வெளியே சொல்ல முடியாத நிலையில், பாரதியின் தாயார் தவியாய் தவிக்கிறார்.

இருந்தாலும், இனி வரும் எபிசோடுகளில், லட்சுமி மற்றும் ஹேமா ஆகியோர் இணைந்தது போல, மீண்டும் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோரும் இணைவார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

lakshmi and hema new promo makes barathi kannamma fans emotional

People looking for online information on Barathi, Barathi Kannamma, Barathi Kannamma Promo, Hema, Kannamma, Lakshmi will find this news story useful.