RRR Others USA
www.garudabazaar.com

களை கட்ட போகும் KGF 2 டிரைலர் ரிலீஸ்.. பிரபல இயக்குனரை தொகுப்பாளராக களமிறக்கும் படக்குழு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கே.ஜி.எஃப் 2ம் பாகத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவின் தொகுப்பாளர் யார் என்பது பற்றி, அசத்தல் அறிவிப்பு ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

KGF 2 trailer event to be hosted by director karan johar

கே.ஜி.எஃப் 1

2018 ஆம் ஆண்டு, கன்னட சினிமாவின் முதல் Pan Indian படமாக உருவாகிய KGF Chapter 1, இந்தியா முழுவதும் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. யாஷ் ஹீரோவாக நடித்த இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பக்கத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. முதல் பாகத்தில் வரும் பல முக்கிய கதாபாத்திரங்கள், இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.

அவர்களுடன் சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளை அன்பறிவு  இயக்கி உள்ளனர். முதல் பாகத்தை தயாரித்த விஜய் கிரகண்டூரின் ஹோம்பலே பிலிம்ஸ், இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளது.

கே.ஜி.எஃப் 2

இதனையடுத்து, வரும் ஏப்ரல் 14,2022 அன்று 'KGF-2' உலகமெங்கும் வெளியாக உள்ளது. கடந்த வருடம் படத்தின் டீசர் வெளிவந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பாடலாசிரியர் மதுரகவி எழுதிய, 'தூஃபான்' என தொடங்கும் பாடல், இணையத்தில் வெளியானது. வெளியான சிறிது நேரத்தில் யூடியூப்பில் 'மியூசிக்' பிரிவில்  முதலிடத்தைப் பெற்று, ட்ரெண்டிங்கிலும் முன்னிலை ஆனது. இந்த பாடலில் 'ராக்ஸ்டார்' யாஷ்ஷின் தோற்றமும், பாடகர்களின் உணர்ச்சிகரமான வரிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இழுத்தது.

டிரைலர் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்

தொடர்ந்து, இந்த படத்தின் டிரைலர், வரும் 27 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. டிரைலர் ரிலீஸ் வேண்டி, ரசிகர்கள் பெரிய அளவில் ஆவலுடன் காத்திருந்து வருகின்றனர். அதே போல, இதன் ரிலீஸினை பெரிய அளவில் நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஹிந்தியில் பிரபல இயக்குனரான கரண் ஜோஹர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளது பற்றி, அதிகாரபூர்வ தகவலை 'KGF 2' படக்குழு வெளியிடப்பட்டுள்ளது.

முதல் பாகத்தை தமிழில், விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி வெளியிட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

KGF 2 trailer event to be hosted by director karan johar

People looking for online information on Event, Karan Johar, KGF, Kgf 2, Prashanth Neel, Trailer Launch, Trailer release, Yash will find this news story useful.