சிம்புவே அப்படி சொல்லிட்டாரு..!! செம குஷியான புதுமுக இயக்குனர்... என்ன படம்னு தெரியுமா..?
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சிம்பு தற்போது 'மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஷூட்டிங் தளத்தில் அவர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் மனோஜ் பாரதிராஜாவுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் ரிலீசான படம் 'ஓ மை கடவுளே'. இந்த பாடம் 25 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உடன் விஜய் சேதுபதி இணைந்து கலக்கி இருந்தனர்.
இந்நிலையில் நடிகர் சிம்பு அந்த பட இயக்குனருக்கு கால் செய்துள்ளார். கால் செய்து ஒரு மணி நேரம் படத்தை புகழ்ந்து பாராட்டியுள்ளார். மேலும் படத்தில் தான் ரசித்த காட்சிகளை சொல்லி, சொல்லி சந்தோஷப்பட்டாராம். இந்த செய்தியை 'ஓ மை கடவுளே' படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ளார்.
The Man #STR had called ! He spoke more than an hour about the film and appreciated straight from the heart !! He pointed out so many small detailing that I had done in the writing and I was absolutely suprised when he went about it in detail !!such a humble man !! Best convo! #
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) March 11, 2020