தல அஜித்தின் 'விஸ்வாசம்'.... ப்பா 500 மில்லியனாம்.... தொடர்ந்து அடிச்சு தூக்கும்.... சாதனை மேல் சாதனை
முகப்பு > சினிமா செய்திகள்சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்திருந்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 2019 ஆம் வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. தந்தை மகள் பாசப்பிணைப்பை பேசிய இந்த படத்தை பார்த்து கண் கலங்காதவர்களே இல்லை எனலாம்.

மேலும் டி.இமான் இசையில் கண்ணான கண்ணே, வேட்டிக்கட்டு உள்ளிட்ட இந்த பட பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. மேலும் கண்ணான கண்ணே பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இதன் ஒரு பகுதியாக, யூடியூப், கானா, ஜியோ சாவன் உள்ளிட்ட தளங்களில் விஸ்வாசம் பாடல்கள் 500 மில்லியன் ஸ்டீரம்களை பெற்று சாதனை புரிந்துள்ளதாம்.
தல அஜித் தற்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கி வரும் இந்த படத்தை போனி கபூர் தயாரித்த வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
5️⃣0️⃣0️⃣ MILLION Streams for #ViswasamAudio 🎧
An @immancomposer Musical #AjithKumar #Nayanthara @directorsiva @Actor_Vivek @IamJagguBhai @vetrivisuals @AntonyLRuben @dhilipaction @LahariMusic @SureshChandraa @DoneChannel1 pic.twitter.com/kerr243gBS
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) March 11, 2020