துல்கருக்கு மணிரத்னம் கொடுத்த 'செல்ல' கிஃப்ட்... ஆரம்பமே 'அமர்களமா' இருக்கேப்பா...!!
முகப்பு > சினிமா செய்திகள்பல படங்களுக்கு நடன அமைப்பாளராக இருந்து புகழ் பெற்றவர் பிருந்தா மாஸ்டர். இவர் புகழ்பெற்ற கலா மாஸ்டரின் தங்கை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.இவர் அடுத்து படம் இயக்க உள்ளார்.

இவரது படத்தில் ஒரு பெரிய ஸ்டார் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அவர் சமீபத்தில் வெளியாகி செம ஹிட் அடித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்' படத்தின் ஹீரோவான 'துல்கர் சல்மான்' தான். இவர் மலையாள சினிமாவில் மிகப் பெரிய ஸ்டாராக உள்ளார்.
இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் நடிக்க இருக்கின்றனர். இந்த படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (12.03.2020) தொடங்கி இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இயக்குனர்கள் மணிரத்னம் மற்றும் கே. பாக்யராஜ் கிளாப் அடித்து துவக்கி வைத்தனர்.
இந்த படத்தின் தலைப்பு கொஞ்சம் ஸ்பெஷல். ஆம் மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் நடித்த 'ஓகே கண்மணி'யில் வரும் பாடல் தொடக்கமான 'ஹே சினாமிகா' தான் இந்தப் படத்தின் தலைப்பு. இதனை செல்ல பரிசாக அவர் கொடுத்துள்ளார்.
And we roll! First day of my dearest Brinda master's directorial debut #HeySinamika
Blessed to start the first day with my favourite people. @jiostudios @brindagopal @dulQuer @MsKajalAggarwal @JioCinema @globalonestudio @ShobhaIyerSant @hasinimani #ManiRatnam #Khushboo pic.twitter.com/3BFeE8rxDJ
— Aditi Rao Hydari (@aditiraohydari) March 12, 2020