www.garudabazaar.com

" எனது கணவருக்கு பிடிச்ச PHOTO இதான்"..கவுண்டமணி & சத்யராஜ் உடன் சுந்தர் சி.. குஷ்பு பகிர்ந்த TWEET!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி.

Kushbu Shared Her Husband Sundar C Favourite Photo

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LEO படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. போட்டோவுடன் வெளிவந்த செம்ம அப்டேட்!  

பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோயம்புத்தூரை சார்ந்த இவர் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த முறை மாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவருடைய இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உன்னைத் தேடி, அன்பே சிவம், கிரி, வின்னர், லண்டன், கலகலப்பு சீரிஸ், அரண்மனை சீரிஸ், தீயா வேலை செய்யனும் குமாரு, ஆம்பள ஆகிய படங்கள் முக்கியமானவை.

2006ல்  வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக சுந்தர் சி அறிமுகமானார். சுந்தர் சி உதவி இயக்குனரான இயக்குனர் சுராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின் வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், ஐந்தாம் படை, முரட்டு காளை, தீ, இருட்டு போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Kushbu Shared Her Husband Sundar C Favourite Photo

Images are subject to © copyright to their respective owners.

தற்போது சுந்தர் சி நடிப்பில்  தலைநகரம் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.  சுந்தர் சி இயக்கத்தில் காஃபி வித் காதல் படம் நவம்பர் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இயக்குனர் சுந்தர் சி, தலைநகரம் படத்திற்கு முன்பே சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 1990 ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த வாழ்க்கை சக்கரம் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் மணி வண்ணன் இயக்கினார். 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய முறை மாமன், அருணாச்சலம் ஆகிய படங்களிலும்  சுந்தர் சி சிறிய வேடத்தில் நடித்துள்ளார்.

Kushbu Shared Her Husband Sundar C Favourite Photo

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் சுந்தர் சி, நடிகை குஷ்புவை 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கோண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில், "கோயம்புத்தூரின் மும்மூர்த்திகள். எனது கணவருக்கு மிகவும் பிடித்த புகைப்படம்" என கூறி சுந்தர் சி, சத்யராஜ், கவுண்டமணி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Also Read | 'விடுதலை' படத்தின் முதல் பாகம் ரிலீஸ் எப்போ? வெற்றிமாறன் சொன்ன சூப்பர் தகவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Kushbu Shared Her Husband Sundar C Favourite Photo

People looking for online information on Goundamani, Khushboo, Kushboo Sundar, Sathyaraj, Sundar C will find this news story useful.