விஜய்யின் மாஸ்டர் - தீனாவின் மாஸ் ஸ்பீச்.. லைஃப் டைம் செட்டில்மென்ட் கொடுத்த தளபதி.!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விஜய்யின் மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் கலக்கிய தீனா, அதுகுறித்து மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். இதனிடையே நேற்று மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது.
இந்நிலையில் மாஸ்டர் ஆடியோ லான்ச்சில், கைதி படத்தில் நடித்து அசத்திய தீனாவின் பேச்சு அனைவராலும் ரசிக்கப்பட்டது. குறிப்பாக ஈ.சி.ஆர் ரைய்டு பற்றி அவர் பேசியது பெரிதும் ரசிக்கப்பட்டது. மேலும் அதற்கு விஜய்யும் கூட புன்னகைத்தார். இந்நிலையில் தனது பேச்சை கேட்டு விஜய் புன்னகைக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இது எனக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் என பதிவிட்டுள்ளார்.