www.garudabazaar.com

"நம்ம மைண்டு பல வருஷம் பின்னாடி போகுதே" 🥰.. கோலங்கள் Reunion.. மலரும் நினைவுகளை அசை போட்ட 90S Fans!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதெற்கென்றே ஒரு பிரத்யேக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. காலம் காலமாக புதிய புதிய சீரியல் தொடர்கள் ஆரம்பமாகும் சூழலில் அனைத்துமே மக்கள் மத்தியில் சிறப்பாக சென்றடையும்.

Kolangal team in SathyaPriya 50th year celebration in cinema

அதிலும் குறிப்பாக, சில சீரியல்கள் ஏற்படுத்திய தாக்கம் என்பது அவை முடிந்தாலும் அதன் நினைவலைகளை பற்றி நினைக்க வைப்பது தான். அந்த வகையில், மிக முக்கியமான தொடர்களில் ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் தொடர். சுமார் 6 ஆண்டுகள் வரை ஒளிபரப்பான இந்த தொடரில், நடிகை தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தேவயானியின் கோலங்கள்

இவருடன் தீபா வெங்கட், மஞ்சரி, அஜய் கபூர், சத்யப்ரியா, அபிஷேக் சங்கர், ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலரும் கோலங்கள் தொடரில் நடித்திருந்தனர். மேலும் திருச்செல்வம் இந்த தொடரை இயக்கி இருந்தார். தமிழ் சீரியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு தொடராக கோலங்கள் பார்க்கப்படும் சூழலில் இந்த தொடரில் நடித்த அனைவரையும் ரசிகர்கள் தற்போது பார்த்தாலும் டக்கென கோலங்கள் தொடரின் நினைவலைகளுக்கு சென்று விடுவார்கள். அந்த அளவுக்கு பலரின் நெருக்கமான தொடர்களில் ஒன்றாகவும் கோலங்கள் அமைந்திருந்தது.

Kolangal team in SathyaPriya 50th year celebration in cinema

கோலங்கள் தொடரை இயக்கி இருந்த திருச்செல்வம், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மக்கள் மனதை கொள்ளை கொண்ட கோலங்கள்

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கோலங்கள் தொடரில் உள்ளவர்கள் சந்தித்து கொண்டது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. ஏராளமான திரைப்படங்களில் நாயகியாக நடித்து பிரபலம் ஆனவர் சத்யபிரியா. பாட்ஷா படத்தில் ரஜினிகாந்திற்கு தாயாக நடித்திருந்தார். இதே போல, ரோஜா, ராஜாவின் பார்வையிலே, நீ வருவாய் என, படையப்பா, ப்ரண்ட்ஸ் என சுமார் 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

மேலும், திருச்செல்வம் இயக்கத்தில், தேவயானி நடித்திருந்த கோலங்கள் தொடரிலும் முக்கிய கதாபத்திரத்தில் சத்யபிரியா நடித்திருந்தார். இந்த நிலையில், தற்போது தனது 70 ஆவது பிறந்தநாளின் போது, சினிமாவுக்குள் நுழைந்து 50 ஆண்டுகள் ஆனதை ஒரு நிகழ்ச்சியாக எடுத்து கொண்டாடி உள்ளார் சத்யபிரியா. அப்போது திரை பிரபலங்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கோலங்கள் Reunion

அந்த வகையில், கோலங்கள் தொடரின் இயக்குனர் திருச்செல்வம், நடிகை தேவயானி, ஸ்ரீவித்யா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கோலங்கள் தொடரின் Reunion தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பார்க்கும் பலரும் கோலங்கள் தொடரின் 2 ஆம் பாகம் தயாராகினால் நன்றாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Kolangal team in SathyaPriya 50th year celebration in cinema

சத்தியபிரியா, சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த நிகழ்ச்சியில் நாசர், மனோபாலா, எஸ்.வி. சேகர், நளினி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

"நம்ம மைண்டு பல வருஷம் பின்னாடி போகுதே" 🥰.. கோலங்கள் REUNION.. மலரும் நினைவுகளை அசை போட்ட 90S FANS!! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kolangal team in SathyaPriya 50th year celebration in cinema

People looking for online information on Devayani, Kolangal, SathyaPriya, ThiruSelvam will find this news story useful.