கலை இயக்குனரும், நடிகருமான கிரண் அவ்வப்போது சழூகம் சார்ந்த நியாமான கேள்விகளை எழுப்பி வருவது வழக்கம். இந்த வகையில் கொரோனாவால் அனைவருக்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் இத்தருணத்தில் இந்த ஸ்விக்கி, ஜொமாட்டோ மற்றும் கடன் தள்ளுபடி செய்தது குறித்ததான கேள்விகளை மிக தைரியத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த நேரத்திலும் கூட ஸ்விக்கி, ஜொமாட்டோ ஆட்கள் டோர் டெலிவரி செய்து கொண்டிருக்கிறார்கள்.
தனது ட்விட்டர் பக்கத்தில்“இந்த நேரத்தில் swiggy / zomato மிக அவசியமானதா?மக்கள் நடமாடும் நேரத்திலே பார்சலை எப்படி தந்தார்கள் என தெரியும். இப்போ யாருமே இல்லாத நேரம் என்ன., என்னலாம் செய்வாங்க?இவர்களை வெளியே விடுவதால், மக்கள் மட்டும் எப்படி வீட்டில் இருப்பார்கள்.?Pls avoid” எனவும் மற்றும் ஒரு ட்வீட்டில் “இப்போ புரிகிறதா.?சிலை செய்த பணத்திற்கும், நாட்டை விட்டு ஓடி விட்டவனுக்காக கடனை தள்ளுபடி செய்யாமல் இருந்து இருந்தால், யாரையும் கை ஏந்தாமல் உதவிகளை செய்து இருக்கலாம். அதற்கு மேலும் வரும் பணத்தால் மக்களை இன்னும் நன்றாக பார்த்து இருக்கலாம். நமக்கு எல்லாம் விதிப்படி தான்” என தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் swiggy / zomato மிக அவசியமானதா?மக்கள் நடமாடும் நேரத்திலே பார்சலை எப்படி தந்தார்கள் என தெரியும். இப்போ யாருமே இல்லாத நேரம் என்ன., என்னலாம் செய்வாங்க?இவர்களை வெளியே விடுவதால், மக்கள் மட்டும் எப்படி வீட்டில் இருப்பார்கள்.?Pls avoid 🙏🙏@CMOTamilNadu @Vijayabaskarofl
— drk.kiran (@KiranDrk) March 29, 2020
இப்போ புரிகிறதா.?சிலை செய்த பணத்திற்கும்,நாட்டை விட்டு ஓடி விட்டவனுக்காக கடனை தள்ளுபடி செய்யாமல் இருந்து இருந்தால்,யாரையும் கை ஏந்தாமல் உதவிகளை செய்து இருக்கலாம். அதற்கு மேலும் வரும் பணத்தால் மக்களை இன்னும் நன்றாக பார்த்து இருக்கலாம். நமக்கு எல்லாம் விதிப்படி தான்😩😩😥
— drk.kiran (@KiranDrk) March 29, 2020