www.garudabazaar.com

கமல் ஹாசனுடன் இணைந்து KGF CHAPTER 2 படத்தை பிரபல தியேட்டரில் பார்த்த இளையராஜா! செம்ம போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளையராஜா - கமல்ஹாசன் சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Kamal Haasan Ilaiyaraaja Watched KGF CHAPTER 2 Movie at Escape Theatre

Also Read | வெங்கட்பிரபு இயக்குனர் ஆக இவங்க தான் காரணமாம்.. நெகிழ்ச்சியான அறிக்கை விட்ட VP! பின்னணி தகவல்

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) வெளியாகி இருக்கிறது.

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டுள்ளார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

Kamal Haasan Ilaiyaraaja Watched KGF CHAPTER 2 Movie at Escape Theatre

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

Kamal Haasan Ilaiyaraaja Watched KGF CHAPTER 2 Movie at Escape Theatre

இந்த படம் உலகம் 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த 10,000 திரையரங்குகளில் கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் அடங்கும்.

தமிழ் நாட்டில் மட்டும் இந்த படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசாகி உள்ளது. இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. முதல் இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இந்த படம் உலகம் முழுவதும் முதல் 4 நாளில் 546 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்துள்ளது.

Kamal Haasan Ilaiyaraaja Watched KGF CHAPTER 2 Movie at Escape Theatre

இந்நிலையில் கமல்ஹாசன் மற்றும் இளையராஜா இணைந்து KGF CHAPTER 2 படைத்தை எஸ்கேப் தியேட்டரில் இணைந்து பார்த்துள்ளனர். இந்த போட்டோக்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

கமல் ஹாசனுடன் இணைந்து KGF CHAPTER 2 படத்தை பிரபல தியேட்டரில் பார்த்த இளையராஜா! செம்ம போட்டோஸ் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Ilaiyaraaja Watched KGF CHAPTER 2 Movie at Escape Theatre

People looking for online information on Escape Theatre, Ilaiyaraaja, Kamal Haasan, KGF Chapter 2 Movie will find this news story useful.