www.garudabazaar.com

Nani30: செம Combo! நானியுடன் முதல்முறை கைகோர்க்கும் முன்னணி ஹீரோயின்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் புதிய படத்தில் முதல்முறையாக பிரபல முன்னணி ஹீரோயின் ஜோடி சேர உள்ளார்.

Nani Mrunal Thakur to pair together for the first time in Nani30

Also Read | நயன் - விக்கி.. இரட்டை குழந்தைகளுடன் முதல் புது வருச கொண்டாட்டம்..😍

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் முதல் முறையாக #Nani30 என பெயரிடப்பட்ட புதிய படத்தினை தயாரிக்க உள்ளது.  நேச்சுரல் ஸ்டார் நானி, தனது 30வது படத்திற்காக வைரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன்  கைகோர்த்துள்ளார், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் பிற நடிகர்கள் மற்றும் குழுவினரை படக்குழு அறிவித்துள்ளது.

Nani Mrunal Thakur to pair together for the first time in Nani30

புத்தாண்டு அன்று இப்படத்தின் தயாரிப்பாளர்கள் #Nani30 இன் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டனர். வீடியோவில் நானி ஒரு கட்டிடத்தின் மேல் அமர்ந்து புகைப்படங்களை கிளிக் செய்து, தனது அடுத்த திட்டம் பற்றி தனது  மகளுடன் கலந்துரையாடுவது போல அமைந்துள்ளது. இந்த படம் ஒரு வித்தியாசமான கருத்தாக்கத்துடன் கூடிய ஒரு எமோஷனல் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்றும், அப்பா-மகள் பான்டிங் யுஎஸ்பியாக இருக்கும் என்றும் வீடியோ உணர்த்துகிறது.

இந்த நிலையில், படத்தின் இயக்குனர் உட்பட முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிமுக இயக்குனர் சௌர்யுவ் இந்த படத்தினை இயக்க உள்ளார்.

Nani Mrunal Thakur to pair together for the first time in Nani30

சீதா ராமம் படத்தின் மூலம் தெலுங்கில் பிரமாண்டமாக அறிமுகமான மிருணாள் தாக்கூர் ஹீரோயினாக நடிக்கிறார்.  இவர் ஏற்கனவே தெலுங்கில் நானி நடித்த ஜெர்சி படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடித்தவர்.

இப்படத்திற்கு  சானு ஜான் வருகீஸ் ISC ஒளிப்பதிவு செய்யவுள்ளார், இது ஜெர்சி மற்றும் ஷியாம் சிங்க ராய்க்கு பிறகு நானியுடன் அவரது மூன்றாவது திரைப்படமாகும். ஹிருதயம் புகழ் மலையாள இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கவுள்ளார், பிரவீன் ஆண்டனி எடிட்டராகவும், ஜோதிஷ் ஷங்கர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சதீஷ் ஈவிவி நிர்வாக தயாரிப்பாளராகவும் பானு தீரஜ் ராயுடு கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

Nani Mrunal Thakur to pair together for the first time in Nani30

மோகன் செருகுரி (சிவிஎம்), டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் மூர்த்தி கே எஸ் ஆகியோரால் பிரமாண்டமாக தயாரிக்கப்பட உள்ளது.

Also Read | தளபதி விஜய்-யுடன் பிரபல நடிகர்.. வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் BTS.. சூப்பர் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Nani Mrunal Thakur to pair together for the first time in Nani30

People looking for online information on Mrunal Thakur, Nani, Nani30 will find this news story useful.