www.garudabazaar.com

Keerthy Suresh : தசரா பட புரமோஷன்.. கூல் டிரிங்கை அசால்டாக குடித்த கீர்த்தி சுரேஷ்!! Dasara

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாட்டில் உடன் தசரா புரமோஷனுக்கு வந்து... நானி உடன் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh dasara movie promotion latest viral

நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் 'தசரா'. நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான  டீஸர் வரை நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகிறார். சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, அவரது ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல், ஷாம்கீலா அங்கீலீசி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் தமிழில் மைனர் வேட்டி கட்டி என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இதனிடையே நடிகர் நானி & கீர்த்தி சுரேஷ் இணைந்து இந்த பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் வரும் 25 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பிரமோஷனுக்காக மும்பை சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், அங்கு நடந்த படவிழாவில் தசரா படத்தில் நானி மது குடிக்கும் ஸ்டைலில் கூல் டிரிங் பாட்டிலை ஏந்திக் குடித்துள்ள வீடியோக்கள் மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh dasara movie promotion latest viral

People looking for online information on Dasara, Keerthi Suresh, Nani will find this news story useful.