www.garudabazaar.com

நானியோடு டான்ஸ் ஆடி FUN பண்ண கீர்த்தி சுரேஷ் 😍.. செம்ம டிரெண்டிங் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் 'தசரா'.

Keerthy Suresh Dance with Nani For Dasara Movie Song chamkeela

Image Source - Keerthy Suresh Instagram

நானியின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி சமீபத்தில் வெளியான  டீஸர் வரை நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது.

ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் பேனரின் கீழ் சுதாகர் செருக்குரி தயாரிக்கும் இப்படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குனராக அறிமுகமாகிறார். சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் நடித்துள்ளனர். நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

Keerthy Suresh Dance with Nani For Dasara Movie Song chamkeela

Image Source - Keerthy Suresh Instagram

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளையொட்டி, அவரது ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கிராமத்து பெண்மணியாக வெண்ணிலா எனும் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

தசரா திரைப்படம் 30 மார்ச் 2023 அன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

Keerthy Suresh Dance with Nani For Dasara Movie Song chamkeela

Image Source - Keerthy Suresh Instagram

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல், ஷாம்கீலா அங்கீலீசி பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் தமிழில் மைனர் வேட்டி கட்டி என்ற பெயரில் வெளியாகி உள்ளது.

Keerthy Suresh Dance with Nani For Dasara Movie Song chamkeela

Image Source - Keerthy Suresh Instagram

இந்நிலையில் நடிகர் நானி & கீர்த்தி சுரேஷ் இணைந்து இந்த பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. கீர்த்தி சுரேஷ் & நானி வேடிக்கையாக நடனம் ஆடும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Keerthy Suresh Dance with Nani For Dasara Movie Song chamkeela

நானியோடு டான்ஸ் ஆடி FUN பண்ண கீர்த்தி சுரேஷ் 😍.. செம்ம டிரெண்டிங் வீடியோ! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Dance with Nani For Dasara Movie Song chamkeela

People looking for online information on Dasara, Keerthy Suresh, Nani will find this news story useful.