"சகோதரர் அஜித்குமாரின் அப்பா".. மறைவுக்கு இரங்கல் தெரிவித்த விஜயகாந்த் & கமல்ஹாசன்!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் அஜித்குமார் தந்தை சுப்ரமணியமின் மறைவுக்கு நடிகர் மற்றும் அரசியல் பிரமுகர்களான கமல்ஹாசன் & விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "பெற்றோர் மீது பேரன்பு கொண்டவர் AK".. அஜித் தந்தையின் மறைவுக்கு விக்னேஷ் சிவன் இரங்கல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.
துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
நடிகர் அஜித்குமார் அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் நடிகர் அஜித் குமார் இல்லத்தில் காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, விஜயபாஸ்கர், விஜய் வசந்த், நடிகர் ஜி எம் சுந்தர், நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் சிவா ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். அஜித்குமார் தந்தையார் பி.எஸ்.மணியின் இறுதி சடங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது.
Images are subject to © copyright to their respective owners.
இறுதிச் சடங்கில் நடிகர் அஜித் குமார், நடிகை ஷாலினி அஜித்குமார், நடிகர் ரிச்சர்ட் ரிஷி, நடிகர் சிவா உள்ளிட்ட அஜித்குமாரின் உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் சுரேஷ் சந்திரா, அனு வர்தன், மருத்துவர் விஜய் ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், " தம்பி அஜித்குமார் அவர்களின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
மேலும், நடிகர் விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், "நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன். தந்தையை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கேப்டன் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன். தந்தையை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்#AjithKumar pic.twitter.com/X8AJjKlxhG
— Vijayakant (@iVijayakant) March 24, 2023
தம்பி #Ajithkumar அவர்களின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 24, 2023
Also Read | சோழப் பேரரசின் சிம்மாசனத்துக்கான போர்.. PS2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போ? செம்ம தகவல்
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vignesh Shivan Condolences To Ajith Kumar Father Demise
- Actor Ajith Kumar At His Father Funeral Besant Nagar
- Actor Ajith Kumar Father PS Mani Funeral Video
- Ajith Kumar Brothers Statement Regarding Their Father Subramaniam Demise
- Udhayanidhi Stalin Pays Respect To Late Ajith Kumar Father
- Alphonse Puthren New Film With Ajith Kumar Movies Producer
- Ajith Kumar AK With His Son Advik In Dubai Football Ground
- Actor Ajith Kumar Shalini Family Dubai Vacation Video
- Kamal Haasan Shared A Photo From Italy Via Della Spiga
- Kamal Haasan Tweet About RRR Naatu Naatu Oscar Award
- Actor Kamal Haasan Instagram Post About Simbhu 48th Movie
- Kamal Haasan Producing Silambarasan TR Next Movie STR 48
தொடர்புடைய இணைப்புகள்
- "உயிரோட திரும்ப வந்தது சிலருக்கு புடிக்கல 😭 எழவு புடிச்சவன்" 😢 Ponnambalam Tearful Interview
- "சாவு வீட்டில் வடிவேலு செஞ்ச காரியம்… விஜயகாந்துடன் மோதலுக்கு காரணம் இதான்…" மீசை
- காசு பணத்தை விட Family தான் முக்கியம்🔥 Busy-யான Life-லயும் குடும்பத்தோடு Time Spent செய்யும் AK😍
- "விஷம் சாப்பாட்டுல கலந்து 😱 ராத்திரி 1 மணி குழி தோண்டி, மந்திருச்சு"- Ponnambalam Shocking Interview
- வெளிநாட்டில் குடும்பத்துடன் THALA அஜித்.. இணையத்தில் VIRAL ஆகும் புகைப்படம். | AJITH KUMAR
- Rajini, Radhika-வ மயக்கம் போட வச்சு Shooting Cut அடிக்க போட்ட மொரட்டு Plan 🤣 Manobala's Atrocities
- "ஏணுங்கோ நல்லாருக்கீங்களா..?" கோவை தமிழில் பொளந்து கட்டிய வானதி ஸ்ரீனிவாசன் JOLLY பேட்டி
- ரெய்டர்களின் 'ரூட்டு தல'😍 BMW-ல் இந்தியாவை அலச போகும் AK🔥 96 RAM போல மீண்டும் பயணம்
- 36 வருஷம் முன்னாடி🔥🔥 இவரு பிறக்கும்போதே KAMAL ரசிகனா தான் பிறந்து இருக்காரு..😮❤️ #LokeshKanagaraj
- "8 மணி ஆச்சுனு Ajith என்ன தேடுவாரு" 🙂 Cheyyar Balu About Tamil Actor's Personal Relationship
- LCU-ல Mankatha😲 Leo-வ Meet பண்ண Rolex💥 Stephen Devassy LIVE BGM Performance🔥
- "100 கோடி சம்பளம் வாங்கி என்ன பண்ணுவாங்க?" 🙄 Sunaina ROFL Interview