www.garudabazaar.com

கர்ப்பிணியாக கீர்த்தி பாண்டியன்...நடிக்கும் புதிய படத்தின் வைரலாகும் First Look Poster!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தும்பா, அன்பிற்கினியாள் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி பாண்டியன் கண்ணகி படத்தில் நடித்து வருகிறார்.

keerthy pandian kannagi movie first look poster

இவர் தேவன், இணைந்த கைகள், ஊமைவிழிகள் படங்களில் நடித்த முன்னாள் MLA, நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகளாவார். இவர் இரண்டு படங்களில் தான் நடித்து இருந்தாலும், இணையத்தில் போட்டோ சூட் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

keerthy pandian kannagi movie first look poster

இந்த படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனுடன், நடிகை வித்யா பிரதீப், நடிகை அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். பருத்தி வீரன் ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரகுமான் இசை அமைக்கிறார்.

keerthy pandian kannagi movie first look poster

தயாரிப்பாளர்கள் எம் கணேஷ் மற்றும் ஜே தனுஷ் தயாரிப்பில் ஷாலின் ஜோயா இயக்கத்தில் நேற்று (15.08.2021) கண்ணகி படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதனை இயக்குனர் மோகன் ராஜா, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.

keerthy pandian kannagi movie first look poster

சிவப்பு நிற உடையில் நிற்கும் கீர்த்தி பாண்டியனின் தொப்புளில் திரி போன்ற கயிற்றுக்கு ஒருவர் நெருப்பு வைப்பது போல இந்த ஃபர்ஸ்ட் லுக் உள்ளது. காதல் மோசடி, கருக்கலைப்பு படத்தின் அடி நாதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

keerthy pandian kannagi movie first look poster

People looking for online information on Vidya Pradeep will find this news story useful.