www.garudabazaar.com

LATEST: விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் அடுத்த மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் சேதுபதி நடிப்பில் பல திரைப்படங்கள் திரையரங்க வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.  அவற்றில் "துக்ளக் தர்பார்", "இடம் பெருள் ஏவல்", "காத்துவாக்குல இரண்டு காதல்", "மாமனிதன்", "கடைசி விவசாயி" மற்றும் "லாபம்" ஆகியன குறிப்பிடத்தக்க படங்களாகும்.

VIJAY SETHUPATHI Tughlaq Durbar Movie New Update

இதில் "துக்ளக் தர்பார்" படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி இருக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

VIJAY SETHUPATHI Tughlaq Durbar Movie New Update

விஜய் சேதுபதியுடன் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் நடித்துள்ளனர். இந்த துக்ளக் தர்பார் திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றி உள்ளது.

VIJAY SETHUPATHI Tughlaq Durbar Movie New Update

கொரோனா பேரிடர் காரணமாக தமிழ்நாட்டில் திரையரங்குகள் இன்னும் திறக்காததால் துக்ளக் தர்பார் திரைப்படம், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி சன் டிவியில் முதல் முறையாக (World Television Premiere) ஒளிபரப்பு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIJAY SETHUPATHI Tughlaq Durbar Movie New Update

மேலும் அதே நாளில் நெட்பிளிக்ஸ் இணையதளத்திலும் வெளியாகலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். VIJAY SETHUPATHI Tughlaq Durbar Movie New Update

அதில் இந்த படத்தின் இசை வருகிற ஆகஸ்ட் 18 ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Think Music நிறுவனம் இந்த படத்தின் இசை உரிமையை கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

VIJAY SETHUPATHI Tughlaq Durbar Movie New Update

People looking for online information on Manjima Mohan, Raashi Khanna, TughlaqDurbar, Vijay Sethupathi will find this news story useful.