www.garudabazaar.com

”காத்துவாக்குல ரெண்டு காதல்”… மற்ற மொழிகளில் படத்தின் title இதுதான்! வெளியான செம்ம தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கான மற்ற மொழிகளுக்கான தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Kathu vakkula rendu kadhal movie other languages title

Also Read | அடடே..! நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த குழந்தைக்கு சூட்டியுள்ள பெயர் இதுதான்!

மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி…

நானும் ரௌடிதான் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி மூவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இவர்களோடு சேர்ந்து சமந்தாவும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் வழங்க விக்னேஷ் சிவன்  தன்னுடைய ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு விக்னேஷ் சிவனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.  ஏப்ரல் 28 அன்று இந்த படம் ரிலீஸாகிறது. ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.

Kathu vakkula rendu kadhal movie other languages title

டீசர் கொடுத்த எதிர்பார்ப்பு…

இந்த படத்தில் காதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ராம்போ என்ற கதாபாத்திரத்தி விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுவரை வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது விஜய் சேதுபதி இருவரையும் காதலிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருக்கலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது சமீபத்தில் வெளியான டீசரில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரிடமும் விஜய் சேதுபதி தனது காதலை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் காட்சி ரசிகர்களைக் கவர்ந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை படக்குழுவினர் அறிவித்தனர். மேலும் இதுவரை வெளியாகு டூ டூ டூ மற்றும் நான் பிழை ஆகிய பாடல்கள் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

Kathu vakkula rendu kadhal movie other languages title

மற்ற மொழிகளில் தலைப்பு…

இந்த படம் தமிழ் தவிர தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகிறது. இந்நிலையில் தமிழில் வைக்கப்பட்டுள்ள தலைப்பான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்ற மொழி ரசிகர்களுக்குப் புரியாது என்பதால் “KRK –Kanmani – Rambo – khatija” என்று படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களின் பெயர்களையே டைட்டிலாக வைத்துள்ளனர். இது சம்மந்தமான அறிவிப்பை சோனி மியுசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Also Read | தியேட்டரில் தெறிக்க விட்ட PUNCH-கள் … KGF ராக்கியின் காந்த குரலுக்கு சொந்தக் காரர் இவர்தான்!

தொடர்புடைய இணைப்புகள்

Kathu vakkula rendu kadhal movie other languages title

People looking for online information on Kathu vakkula rendu kadhal movie, KRK, KRK Updates, Nayanthara, Samantha, Vignesh shivan, Vijay Sethupathi will find this news story useful.