www.garudabazaar.com

“நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே”…. நயனுடன் ரொமான்ஸ்.. விக்னேஷ் சிவனின் வைரல் story !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட, அது வைரல் ஆகியுள்ளது.

Vignesh shivan nayanthara romantic insta viral story

Also Read | ஒவ்வொரு வசனமும் ‘PUNCH’தான்… சிலிர்த்து சில்லறைய செதற விட்ட ரசிகர்கள் – எழுதியது இந்த நடிகரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா….

ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கிய நயன்தாரா அடுத்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே ரஜினியின் சந்திரமுகி படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையானார். அதன் பின்னர் பில்லா, யாரடி நீ மோகினி, வில்லு, வல்லவன் மற்றும் கஜினி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய அவருக்கு ரி எண்ட்ரி படமாக ராஜாராணி படம் அமைந்தது. அதன் பின்னர் வரிசையாக ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றது.

Vignesh shivan nayanthara romantic insta viral story

மலர்ந்த காதல்…

போடா போடி திரைப்படத்துக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் நானும் ரௌடிதான். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் நடித்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது  நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து இருவரும் காதலர்களாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இப்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனம் மூலமாக ராக்கி படத்தை வெளியிட்டுள்ளனர். அதுபோலவே கூழாங்கல் என்ற சர்வதேச விருதுகளைக் குவிக்கும் படத்தையும் வெளியிட உள்ளனர்.

Vignesh shivan nayanthara romantic insta viral story

விக்னேஷ் சிவன் பகிர்ந்த ரொமாண்டிக் வீடியோ…

அடிக்கடி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் நயன்தாராவோடு இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார் விக்னேஷ் சிவன். அந்தவகையில் தற்போது நயன்தாரா கைவிரல்களை பிடித்தபடி இருக்கும் ரொமாண்டிக்கான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவில் ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற அதிசயம் பாடலில் இடம்பெறும் “நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே… நகம் எனும் கிரீடம் அதிசயமே” என்ற பாடல் வரிகளையும் இணைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

Vignesh shivan nayanthara romantic insta viral story

Also Read | Repeat Repeat Repeat”… திரும்ப திரும்ப வரும் ரசிகர்கள்…. டிரீம் வாரியர்ஸ் வெளியிட்ட மாஸான KGF 2 pic!

“நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே”…. நயனுடன் ரொமான்ஸ்.. விக்னேஷ் சிவனின் வைரல் STORY ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan nayanthara romantic insta viral story

People looking for online information on Nayanthara, Vignesh shivan, Vignesh shivan nayanthara instagram story, Vignesh shivan nayanthara Latest Updates will find this news story useful.