www.garudabazaar.com

"இனிமே அதை இப்படி டீல் பண்ணுங்க".. ஷிவின் வாழ்க்கைல நடந்த சம்பவம்.. கதிர் கொடுத்த அட்வைஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், சமீபத்தில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

Kathiravan advices shivin about facing negativity in Life

Also Read | கேப்டன்சி TASK.. சூடுபிடிச்ச போட்டி.. கடைசி வரை Tough கொடுத்த அசீம்.. இந்த வார தலைவர் இவர்தான்.!  

மேலும், கடந்த வாரம் நடந்த Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி உள்ளார். மேலும் இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இந்த Ticket To Finale டாஸ்க்கிற்கு மத்தியில் அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்றுக்கு முன்னேற முனைப்பு காட்டி போட்டியில் கடினமாக விளையாடி இருந்தனர். அதே போல, நிறைய சண்டைகள் மற்றும் விவாதங்கள் கூட அரங்கேறி, போட்டியாளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இருந்தாலும், அனைத்து டாஸ்க்குகளும் விறுவிறுப்பாகவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கடுத்து, BB Critics விருதுகள் வழங்கப்பட்டது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.

Kathiravan advices shivin about facing negativity in Life

இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றி இருந்த கமல்ஹாசன், கடந்த வாரம் போட்டியாளர்களின் செயல்பாடு குறித்தும் நிறைய விஷயங்களையும் பேசி இருந்தார். அதே போல, கடைசியில் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.

இந்த நிலையில், ஆறாவது பிக் பாஸ் சீசனில் கடைசி நாமினேஷன் இந்த வாரம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையில் இந்த நாமினேஷன் அரங்கேறி இருந்தது. இதில் "Nominated" என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒன்று இருக்க, அதனை தாங்கள் நாமினேட் செய்யும் போட்டியாளர் முகத்தில் நாமினேட் செய்து ஒட்டி அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் என தெரிகிறது. இதில், ஷிவின், மைனா நந்தினி, விக்ரமன் உள்ளிட்டோர் அசிமை நாமினேட் செய்து அவர் முகத்தில் நாமினேட்டட் என்ற ஸ்டிக்கரை ஒட்டினர். இந்நிலையில், விக்ரமன் தான் கதிரவனை நாமினேட் செய்வதாக கூறியுள்ளார்.

Kathiravan advices shivin about facing negativity in Life

இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே கிச்சன் பகுதியில் ஷிவினும் கதிரவனும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, தனக்கு வரும் எதிர்மறையான கமெண்ட்கள் குறித்து ஷிவின் பேசுகிறார். இதனை கேட்ட கதிரவன் அதை புறம் தள்ளிவிட்டு வாழ்க்கையை பார்க்க வேண்டும் என அட்வைஸ் செய்கிறார். அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசுகிறார் ஷிவின்.

அப்போது ஷிவின்,"என்னுடைய போஸ்ட்ல ஒருத்தர் கமெண்ட் பண்ணிருந்தாரு. இதெல்லாம் என்ன ராக்கெட் லாஞ்சிங்கா?-னு எழுதியிருந்தார். பலர் பாராட்டியும் இருந்தாங்க. ஆனாலும் அந்த கமெண்ட் என்ன பாதிச்சது. அவருக்கு ரிப்ளை பண்ண போறேன்னு என் ஃப்ரண்ட் கிட்ட சொன்னேன். வேண்டாம், எத்தனை பேருக்கு நீ கமெண்ட் பண்ணுவ-ன்னு திட்டுனா" என்றார்.

இதனை கேட்ட கதிரவன்,"எப்போதும் அப்படி கமெண்ட்களுக்கு பதில் சொல்லாதீங்க. உங்க வாழ்க்கையை பாருங்க. அதுக்கே உங்களுக்கு நேரம் சரியா இருக்கும். அவர் சொன்னது மாதிரி நீங்க ராக்கெட்டே விட்டாலும், ராக்கெட் தானே வேற கிரகத்துக்கா போனீங்க-ன்னு சொல்லுவாங்க. அதுனால நெகட்டிவிட்டிய ஒதுக்கிட்டு போயிட்டே இருக்கணும். நீங்க மிஸ் யூனிவெர்ஸ் வாங்குனாலும் இவங்கல்லாம் மிஸ் யுனிவெர்ஸா-ன்னு கமெண்ட் போடுவாங்க. என்ன பண்ணுவீங்க. வெங்காயத்துல மேல உள்ள தோலை உரிச்சிட்டு சமைக்கிறோம்ல. அந்த தோல் தான் நெகட்டிவிட்டி. அதை எடுத்துடனும்" என்கிறார்.

Also Read | ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் வாரிசு, துணிவு.. ட்விட்டரில் வெங்கட் பிரபு வைத்த புதிய DP .. Trending!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kathiravan advices shivin about facing negativity in Life

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Kathiravan, Kathiravan advices shivin, Shivin, Vijay Television, Vijay tv will find this news story useful.