www.garudabazaar.com

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் வாரிசு, துணிவு.. ட்விட்டரில் வெங்கட் பிரபு வைத்த புதிய DP .. Trending!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர். இவர்கள் இருவரின் திரைப்படமும் ஒரே நாளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (11.01.2023) வெளியாக உள்ளது.

Venkat Prabhu changed his twitter dp amid thunivu varisu release

Also Read | மைனா & விக்ரமனுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுக்கும் அமுது.. ஸ்பாட்ல விக்ரமன் போட்ட கமெண்ட்😅..!

அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி மக்கள் மத்தியில் விறுவிறுப்பை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரிலீஸ் நாளையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் H வினோத்துடன் துணிவு திரைப்படம் மூலம் இணைந்துள்ளார் நடிகர் அஜித். அதே போல, இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிந்துள்ளார்.

துணிவு திரைப்படத்தை போலவே,  விஜய்யின் திரைப்படமான "வாரிசு" கூட 11.01.2023 அன்று வெளியாக உள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஜெயசுதா, பிரபு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அஜித் மற்றும் விஜய் என இரண்டு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால், இருவரின் ரசிகர்களும் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர். அதே போல, ரசிகர்கள் மத்தியில் ஒரு சிறு போட்டியும் கூட உருவாகி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய ட்விட்டர் DP- ஐ மாற்றி உள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிக வைரல் ஆகி வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகியிருந்த வேலாயுதம் மற்றும் அஜித் நடிப்பில் உருவாகியிருந்த மங்காத்தா ஆகிய திரைப்படங்கள் படப்பிடிப்பின் போது, இருவரும் நேரில் சந்தித்திருந்தனர். அந்த சமயத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் அவர்களுடன் இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தை அந்த சமயத்தில் கலக்கி இருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது அந்தப் படத்தை தனது ட்விட்டர் DP ஆக மாற்றி வைத்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இதுவும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

 

Also Read | "அழாதீங்க, We லவ் யூ".. நிகழ்ச்சி மேடையில் கண்ணீர் விட்டு கலங்கிய சமந்தா.. ரசிகர்கள் செஞ்ச விஷயம்

தொடர்புடைய இணைப்புகள்

Venkat Prabhu changed his twitter dp amid thunivu varisu release

People looking for online information on Thunivu, Varisu, Venkat Prabhu will find this news story useful.