'ஃபுட் பால் வெறித்தனமா விளையாடிருக்காரு' - தளபதி விஜய் குறித்து கதிர் மகிழ்ச்சி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 19, 2019 09:14 PM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், ஜாக்கி ஷெராஃப், ஆனந்தராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கதிர், ''தொடர்ந்து மூனு விஜய் அண்ணா இசை வெளியீட்டு விழா நிகழச்சியில் பங்கேற்றிருக்கிறேன். மெர்சலில் கடைசி வரிசையில் இருந்தேன். சர்காரில் பின்னாடி உட்கார்ந்து இருந்தேன். இப்போ அவர் கூட உட்காந்து இருக்கேன். இத விட என்ன வேணும். விஜய் அண்ணா கூட இருந்த 25 நாட்களை என் வாழ்க்கையில் கிடைத்த பாடமாக நினைக்குறேன். தளபதி விஜய் புட் பால் வெறித்தனமா பண்ணிருக்ககாரு.
100 நாட்களா கார்லயே தூங்கி எழுந்து எடிட், ஷூட் எல்லாத்தையும் பண்ணாரு அட்லி. அவர் போடுற 200 சதவிகித உழைப்புல 10 சதவிகிதம் போட்டாலே எங்கேயோ போய்டுவோம். அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் கதவை தட்டும். அத எடுத்து உள்ள வச்சுக்கணும்'' என்றார்.