'இந்த படத்துல நான் வில்லன்' - 'பிகில்' இசை வெளியீட்டு விழாவில் பிரபல நடிகர் அதிரடி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 19, 2019 08:22 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள படம் பிகில் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், ஜாக்கி ஷெராஃப், ஆனந்தராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது (செப்டம்பர் 19) நடைபெற்று வருகிறது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் டேனியல் பாலாஜி, இது தளபதியோட எனக்கு ரெண்டாவது படம். எப்பவுமே என்னங்கனா எப்படி போகுது என்பார். இந்த படத்துல என்னை நண்பனு கூப்பிட்டு நண்பன் ஆக்கிட்டாரு. இந்த படத்துல நான் வில்லன் என்றார்.
Tags : Vijay, Thalapathy, Bigil, Nayanthara, AR Rahman, Atlee