இந்தியாவையே கண்ணீர் விட வைத்த நிர்பயா வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளில் ஒருவர் சிறையிலேயே தூக்கு போட்டு இறந்துவிட, மீதமுள்ள 5 பேர் மீது வழக்கு நடத்தப்பட்டு வந்தது.
அந்த 5 பேரில் ஒருவன் 16 வயது சிறுவன் என்பதால் இதை காரணம் வைத்து சிறார் சட்டத்தின் கீழ் அவன் விடுவிக்கப்பட்டான். தொடர்ந்து எஞ்சிய 4 குற்றவாளிகளுக்கும் 7 வருடங்கள் கழித்து நேற்று திஹார் சிறையில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் 4 பேரை தூக்கிலிட்டது தொடர்பாக நடிகை கஸ்தூரி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “நிர்பயா வழக்கில் 4 மிருகங்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒருவன் மட்டும் சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பித்துவிட்டான். அவன் பஸ்ஸில் மாட்டி அல்லது கொரோனா வைரஸ் தாக்கி சாகணும்” என தெரிவித்துள்ளார்.
#NirbhayaVerdict At last, All four animals in the #NirbhayaCase have been hanged. One got away under the 'juvenile' loophole. Hope he catches coronavirus or dies under a bus.
— Kasturi Shankar (@KasthuriShankar) March 20, 2020