இப்ப சொன்னதை நாங்க அப்பவே செஞ்சிட்டோம்ல! மோடிக்கு வீடியோவில் பதிலளித்த கஸ்தூரி!
முகப்பு > சினிமா செய்திகள்இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ஊரடங்கை கடைபிடித்து வரும் நாட்டு மக்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது என தெரிவித்தார். மேலும், ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணைத்து அனைவரின் வீடுகளிலும் அகல்விளக்கு ஏற்ற வேண்டும் எனவும் இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரதமரின் பேச்சுக்கு பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டரில் ஒரு ஜாலி கமெண்ட் அடித்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான ஆத்மா என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார் கஸ்தூரி. ''விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம் குலம் விளங்க விளக்கு வைப்போம்'' என்ற பாடல்தான் அது. நாங்கல்லாம் அப்பவே சொன்னோம்ல என்று நகைச்சுவையாக ட்வீட் செய்துள்ளார் கஸ்தூரி.
இது சமூக வலைத்தளங்களில் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
நாங்கல்லாம் அப்பவே சொன்னது... 😄
விளக்குவைப்போம் விளக்கு வைப்போம்...
Vilakku Vaipom Video Song | Athma Tamil Movie | Ramki | Rahman | Kasthur... https://t.co/ttHSbLBHub via @YouTube
— Kasturi Shankar (@KasthuriShankar) April 3, 2020