பிக்பாஸ் சீசன் 3 அறிவிக்கப்பட்டு அதற்கான புரோமோ வெளியாகி வருகிறது. கடந்த சீஸன்களை போலவே இந்த சீஸனையும் கமலே தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் 3 இன்று(23.06.2019) தொடங்கப்படவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கும் போட்டியாளர்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. சில பிரபலங்களை குறிப்பிட்டு அவர்கள் பிக்பாஸில் கலந்துகொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகின.
அதன் ஒரு பகுதியாக நடிகை கஸ்தூரியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், போன் டிவி, வெளியுலக தொடர்பு எதுவும் இல்ல. இயற்கையோடு மட்டுமே எனது தொடர்பு. சுத்தமான, எந்த தொந்தரவும் இல்லாமல்... இது பிக்பாஸ் அல்ல. மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு பரந்த சதுப்பு நிலப்பகுதி.
பின்குறிப்பு: செய்திகள் வெளியானதை வைத்து நான் பிக்பாஸ் 3யில் கலந்துகொள்ளவிருப்பதாக நம்பியவர்களுக்கு, பத்திரிக்கையில் சொல்லுறதையெல்லாம் நம்புற பச்சபுள்ளையா நீங்க?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.