உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பால் சீஸன் 1 மற்றும் சீஸன் 2 நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. நடிகர் கமலின் தொகுத்து வழங்கிய விதமும் போட்டியாளர்களை கையாண்ட விதமும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது.

தற்போது பிக்பாஸ் சீஸன் 3 குறித்து அறிவிக்கப்பட்டு இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டதும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
மேலும் இந்த சீஸனில் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து இன்று தெரிந்துவிடும். இந்நிலையில் பிக்பால் நிகழ்ச்சியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.
இன்று முதல் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது, ஏன்னா..? - பிக்பாஸ் குறித்து அறிவித்த கமல் வீடியோ