கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கி கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்றது.
ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக உள்ளது. இதனை தற்போது விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன்"கேள்வி கேட்க நான் ரெடி! மறுபடியும் வாக்களிக்க நீங்க ரெடியா" பிக்பாஸ் 3 என கமல் கெத்தாக பேசியுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஜூன் 23 அன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இன்று பிக் பாஸ் 3இன் ஷூட்டிங் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. இனி திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது
"மறுபடியும் வாக்களிக்க நீங்க ரெடியா"ஆரம்பமானது பிக் பாஸ் 3 இன் ஷூட்டிங் விவரம் இதோ ! வீடியோ