Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

டபுள் ட்ரீட்.. தனுஷ் நடித்த 'நானே வருவேன்' பார்த்த பின் கார்த்திக் சுப்புராஜ் செம ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானே வருவேன் படம் பார்த்த பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட் செய்துள்ளார்.

Karthik Subbaraj tweet about Naane Varuven Movie

Also Read | 'நானே வருவேன்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. செல்வராகவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தாணு!

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில்

கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் "  நானே வருவேன்"  திரைப்படம் உலகமெங்கும் நேற்று (வியாழக்கிழமை) வெளிவந்தது.

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை இந்துஜாவும் மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளனர்.

இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Karthik Subbaraj tweet about Naane Varuven Movie

இந்த படத்திற்கு புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும்,   ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தினை பார்த்த பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில்," Loved நானே வருவேன் 👌👌 எப்போதும் தனுஷின் நடிப்பை காண்பது அளப்பரியது. அதுவும் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பு.... அதுவும் இரு வேடங்களில் 🔥🔥 வாழ்த்துகள் யுவன் சங்கர் ராஜா சார், தாணு & மொத்த படக்குழு." என கார்த்திக் சுப்புராஜ் ட்வீட் செய்துள்ளார் .

Karthik Subbaraj tweet about Naane Varuven Movie

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என்றும், டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது  என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Also Read | 'நானே வருவேன்' படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா? சாதனை படைத்த தனுஷ்!

தொடர்புடைய இணைப்புகள்

Karthik Subbaraj tweet about Naane Varuven Movie

People looking for online information on Karthik Subbaraj, Karthik Subbaraj tweet, Naane Varuven will find this news story useful.