Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் FDFS எப்போ? தயாரிப்பாளர் தாணு கொடுத்த தெறி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானே வருவேன் படத்தின் முதல் நாள் முதல் காட்சி குறித்த தகவல்களை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.

Naane Varuven FDFS Time Announced by Producer Thanu

Also Read | "எதுவும் இங்கே சரியும் இல்ல தவறும் இல்ல".. வெளியான'விக்ரம் வேதா' தீம் பாடல் வீடியோ!

தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும்  'நானே வருவேன்'  படத்தை அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி உள்ளன. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் பின்னணி இசை பணிகளுக்காக ஹங்கேரி புடாபெஸ்ட்டில் உள்ள பிரபல இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசைப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Naane Varuven FDFS Time Announced by Producer Thanu

இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 'நானே வருவேன்' படம் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் கலைப்புலி தாணு, நானே வருவேன் படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்படும் என அறிவித்துள்ளார். ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் நலன் கருதி இந்த முடிவை தான் எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் தான் இதற்கு முன் தயாரித்த அசுரன் & கர்ணன் படங்களின் முதல் நாள் முதல் காட்சி காலை 8 மணிக்கு தான் திரையிடப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

Naane Varuven FDFS Time Announced by Producer Thanu

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என்றும், டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது  என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | FESTIVAL -ல் ரிலீஸ் ஆகும் லாரன்ஸ் & ப்ரியா பவானி சங்கரின் புதிய படம்.. மாஸ் போஸ்டருடன் Official அப்டேட்.!

தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' படத்தின் FDFS எப்போ? தயாரிப்பாளர் தாணு கொடுத்த தெறி அப்டேட்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Naane Varuven FDFS Time Announced by Producer Thanu

People looking for online information on Dhanush, Kalaippuli S Thanu, Naane Varuven FDFS, Thanu will find this news story useful.