இங்கெல்லாம் 'மக்களோட' நடமாட்டம் அதிகமா இருக்கு... நடிகரின் உருக்கமான வேண்டுகோள்!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சிவகுமார் அவர்களின் மகனும், நடிகர் சூர்யா அவர்களின் தம்பியுமான நடிகர் கார்த்திக் நடிப்பு மட்டும் இன்றி சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். விவசாயத்தை மீட்டெடுக்க சமீபத்தில் இவர் ஆரம்பித்த உழவன் பவுண்டேஷன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கொரோனா குறித்து நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் “கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த அரசாங்கத்திற்கும், அனைத்து துறையினருக்கும் முக்கியமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எனது மனமார்ந்த மரியாதையை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் கடற்கரையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதை என்னால் பார்க்க முடிகின்றது. அனைவரும் வீட்டில் பாதுகாப்புடனும், சுகாதாரத்துடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.