Kaateri logo top
www.garudabazaar.com

Viruman Audio Launch: "சூர்யா National Award வாங்கிட்டான்.. அடுத்து கார்த்தி" - வாழ்த்திய பாரதிராஜா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோதிகா & சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.

karthi willl get national award bharathiraja viruman audio launch

இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இணைகிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார். இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

Also Read | "அவ்ளோ செல்வாக்கு.. ஆனாலும் சூர்யா, கார்த்தி ரிக்‌ஷா-ல School போனாங்க" - விருமன் விழாவில் பாரதிராஜா

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை மாநகரில் நடந்தது, படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, “கார்த்திக் டான்ஸ் ஆடுவதை பார்த்தேன், பிரமித்து விட்டேன். சிறு பையனாக அவன் இருக்கும் போது நான் பார்த்தேன். இப்போது இப்படி ஆடுகிறான்.

இதே போல் அவன் நடிப்பு... கண் பேசுகிறது, முடி பேசுகிறது, முகம் பேசுகிறது.. பருத்திவீரன் பார்த்தேன். ஷாக் ஆனேன்.. அதன் பிறகு விருமன் திரைப்படம் பார்த்து கார்த்திக் நடிப்பில் ஷாக் ஆகி இருக்கிறேன். இவன் எங்கே சென்று நிற்கப் போகிறான் என்று தெரியவில்லை. அற்புதமானவன்... (கார்த்திய பார்த்து) சூர்யா நேஷனல் அவார்ட் வாங்கி விட்டான்.. அடுத்து நீ வருவ... உனக்கும் கலை அமையும்” என்று வாழ்த்தி பேசினார்.

VIRUMAN AUDIO LAUNCH: "சூர்யா NATIONAL AWARD வாங்கிட்டான்.. அடுத்து கார்த்தி" - வாழ்த்திய பாரதிராஜா வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

karthi willl get national award bharathiraja viruman audio launch

People looking for online information on 2D Entertainment, Bharathiraja, Karthi, Suriya, Viruman, Viruman Audio Launch, Yuvan Shankar Raja will find this news story useful.