bigg boss 6 tamil : “ஜனனி பொம்மைய இதனால எடுத்தேன்.. ஆனா”.. பரபரப்பு அடங்கிய பின் ஷெரினா சொன்ன விஷயம்.!
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் பொம்மை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேட்பதற்கு ஏதோ பொம்மை டாஸ்க் என்றால், சிறு குழந்தை தனமான டாஸ்க் என நினைத்துவிட முடியாது. முந்தைய சீசன் பொம்மை வரலாற்றை சற்று பின்னோக்கி திரும்பிப் பார்த்தால் அங்கு நடந்ததெல்லாம் களேபரம்தான். இந்த டாஸ்கில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் பெயர் தவிர்த்து வேறு பெயர் எழுதி ஒட்டப்பட்ட பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடவேண்டும். அப்படி தாங்கள் எடுத்துச் செல்லும் பொம்மையில் உள்ள பெயருக்குரிய போட்டியாளர் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்கில் இருந்து எலிமினேட் ஆகாமல் காப்பாற்றப்படுவார். அதே சமயம், கடைசியாக வருபவரின் கையில் எந்த பொம்மை இருக்கிறதோ, அந்த பொம்மையில் இருக்கும் பெயருக்குரிய போட்டியாளர் இந்த லக்ஜூரி பட்ஜெட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.
அதாவது இந்த டாஸ்கில், ஒரு போட்டியாளர் நினைத்தால், சக போட்டியாளரை காப்பாற்றவும் முடியும், அதேசமயம், ஒரு குறிப்பிட்ட போட்டியளரின் பெயர் ஒட்டப்பட்ட பொம்மையை எடுத்துக்கொண்டு கடைசியாக ஓடிவந்தோ அல்லது கூடாரத்துக்குள் செல்லாமல், வெளியே நின்றுவிடுவதன் மூலமோ ஒரு போட்டியாளரை வெளியேறச் செய்யவும் முடியும். இதில் மணிகண்ட ராஜேஷ் ஆவேசத்துடன் பொம்மையை தூக்கி போட கூடிய ப்ரோமோ வெளியே வந்ததை காண முடிந்தது.
இதில் ஷெரினா மற்றும் ஜனனி இருவருக்கும் இடையே உரசல் எழுந்தது. அதன்படி ஜனனியின் பொம்மையை எடுத்த ஷெரினா, தன் கையில் பொம்மை வந்துவிட்டாலும் கூட, அவர் அதை டால் ஹவுஸில் வைக்கவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், “நான் பொம்மையை எடுத்தேன். ஆனால் டால் ஹவுஸில் அதை வைக்கவில்லை. ஏனென்றால் யாராவது ஒருவர் விளையாட்டை ஆரம்பிக்க வேண்டும் என்று தான் நான் நினைத்தேன். மற்றபடி ஜனனியை பொறுத்தவரை அவர் இதில் எலிமினேட் ஆகி இருக்கிறார், ஆனாலும் அவர் எப்படி நாமினேஷன் ஆனாலும் மீண்டு வந்து விடக்கூடிய ஒருவர்தான். அது அவரால் முடியும்” என்று தன் தரப்பு விளக்கத்தை கூறினார்.
செரினாவை பொறுத்தவரை டாலர் எடுத்தாலும் அவர் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.