தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘RX 100’ திரைப்படத்தின் நாயகன் கார்த்திகேயா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹிப்பி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சூர்யா-ஜோதிகாவின் ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹிப்பி’ திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
இப்படத்தில் கார்த்திகேயாவுக்கு ஜோடியாக பாலிவுட் டிவி பிரபலம் டிகன்கானா சூர்யவன்ஷி நடித்துள்ளார். மேலும், ஜஸ்பா சிங், வெண்ணிலா கிஷோர், ஜேடி சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கோடை விடுமுறையைடொட்டி விரைவில் இப்படம் ரிலீசாகவுள்ளது.
"பொண்ணுங்கள ஏன் நிலாவோட ஒப்பிடுறாங்க தெரியுமா?" - RX 100 நாயகனின் ஹிப்பி டிரைலர் வீடியோ வீடியோ