''250 தியேட்டரில் வெளியான கார்த்தியின் கைதி படம், தற்போது....'' - தயாரிப்பாளர் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'கைதி' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Producer SR Prabhu tweets about Karthi's Kaithi Success

இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் கார்த்தியுடன் அஞ்சாதே நரேன், விஜய் டிவி தீனா, ஜார்ஜ் மரியம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில்,  கைதி திரைப்படம் 250 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தற்போது மூன்றாவது வாரத்தில் 350 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது தொடர்ந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த படத்துக்கு  அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.