சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ சிங்கிள் டிராக்கான ’மால்டோ கித்தாபுலே’ அப்டினா என்னா தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

Malto Kithapuleh Lyrics Meaning in Sivakarthikeyan Ps Mitran Hero Movie

‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் விறுவிறுப்பான டீசரை கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நல்லது செய்ய முகமூடி அணிந்து வரும் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘மால்டோ கித்தபுலே’ என்ற பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது இப்படத்தில் இடம்பெறும் 'மால்டோ கித்தபுலே’ என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை படக்குழு தற்போது அறிவித்துள்ளது அதன்படி மால்டோ கிட்டபுலே என்றால் கெத்தா ஸ்டைலா துணிச்சலுடன் சுத்தி திரிபவர் என்று பொருள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படத்தின் ‘மால்டோ கிட்டபுலே’ என்ற சிங்கிள் டிராக் பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ் குவித்து வருகிறது. இப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர்.20ம் தேதி ரிலீசாகவுள்ளது.