www.garudabazaar.com

சிவன் இல்லாம சக்தி இருக்க முடியும்! சிங்கிள் மதர்ஸ் சிங்கப்பெண்கள் மாதிரி.. கண்ணம்மா பதிலடி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் சேனலில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் விவாகரத்து கொடுக்கப்பட்டுவிட்டது.

Kannamma reaction for Bharathi Shiva Shakthi Drama

எனினும் குழந்தைகள் விருப்பப்பட்டால் பாரதியை பார்க்க அனுமதி கொடுக்கப்பட்டுவிட்டது. பாரதியும் கண்ணம்மாவையும் குழந்தைகளையும் மனமாற்றம் செய்ய, அவர்களின் ஊருக்கு சென்றுவிட்டார். கிராமத்தில் நடக்கும் தற்போதைய எபிசோடுகளில் பாரதி கண்ணம்மாவை பல வழிகளில் சந்தித்தும் பேசியும் சமாதானம் பண்ணியும் வருகிறார். அதன் ஒரு அங்கமாக அந்த ஏரியா மக்களிடையே நட்பாக பழகி அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது மருத்துவ முகாம் போடுவது உள்ளிட்டவற்றின் மூலம் கண்ணம்மாவை சந்திப்பதற்கும் பேசுவதற்குமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறார் பாரதி.

Kannamma reaction for Bharathi Shiva Shakthi Drama

இதனிடையே லட்சுமி பாரதிக்கு தன்னுடைய ஆதரவுக் கரத்தை நீட்டி விட்டார். இதனால் பாரதி டபுள் மடங்கு எனர்ஜியுடன் கண்ணம்மாவை அவ்வப்போது காதலாக வம்பிழுத்து வருகிறார்.  இந்த நிலையில்தான் இதன் ஒரு அங்கமாக பரமசிவன் - பார்வதி திருவிளையாடலான சிவன் - சக்தி சண்டையை நாடகமாக போடுகிறார் பாரதி. இதில் குழந்தை லட்சுமி முருகர் வேடம் ஏற்கிறார்.

Kannamma reaction for Bharathi Shiva Shakthi Drama

இதன் தொடர்ச்சியாக, சிவன் சொல்லியும் பார்வதி கேட்காமல் யாகத்துக்கு செல்ல, இதனால் சிவன் கோபித்துக்கொள்ளும் அதே கதை ஆங்கிலம் கலந்து காமெடியாகவும் சீரியஸாகவும் நாடகமாக அரங்கேறியது. இதற்கென வேறு நடிகர்கள் சிவன் - பார்வதியாக நடித்துள்ளனர்.

இதில் பல தற்கால பாடல்கள் பின்னணியில் ஒலிபரப்பு செய்யப்பட்டன. உதாரணமாக சிவன் - பார்வதி இருவரும், ‘நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே’ பாடலுக்கு ரொமான்ஸ் செய்தனர், பின்னர்  பார்வதி பிரிந்து போனதும், சிவன் ‘போ நீ போ. தனியாக தவிக்கின்றேன்’ மோடுக்கு போனார். அதன் பின்னர், கோவப்பட்ட சிவன் ‘ஓம் சிவோகம்’ பாடலுக்கு வைப் ஆனார். அதன் பின்னர்,  ‘ஒருநாள் சிரித்தேன்.. மறுநாள் வெறுத்தேன்.. மன்னிப்பாயா?’ என பாடி சிவனிடம் பார்வதி மன்றாடுகிறார். இறுதியில் ‘சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸூடா’ பாடலில் இருவரும் ஜோராக காட்சி அளிக்கின்றனர்.

Kannamma reaction for Bharathi Shiva Shakthi Drama

இந்த நாடகம் முடிந்ததும் அனைவரும் பாரதியை வாழ்த்தினர். ஆனால் கண்ணம்மா , “பாரதியிடம் சென்று, நாடகம் நன்றாக தான் இருந்தது. ஆனால் கருத்து பழசாக இருக்கிறது. சிவனுக்கு வேண்டுமானால் சக்தி இல்லாமல் இருக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் சக்திக்கு சிவன் இல்லாமல் இருக்க முடியும். சக்திக்கு சிவன் தேவை இல்லை. சிங்கிள் மதர்ஸ் எத்தனையோ பேர் இருக்காங்க. சிங்கபெண்கள் அவங்க எல்லாம்” என சொல்லிவிட்டு போகிறார். பாரதியின் முகம் சோர்ந்தாலும், அவர் அதை பற்றி கவலைப்படவில்லை.

Kannamma reaction for Bharathi Shiva Shakthi Drama

ஏனென்றால் கண்ணம்மாவை புண்படுத்தாமல் அவர் மனதை மாற்ற எண்ணுகிறார் பாரதி. அதற்குத் தகுந்தாற்போல், கண்ணம்மாவும் பாரதி தன் அம்மா ஃபோட்டோவை தேடிக் கண்டுபிடித்து வந்து தன் பிறந்த நாளுக்கு பரிசளித்த பாரதியை பற்றி தாமரையிடம் கூறி அங்கலாய்த்துக் கொள்கிறார். பாரதி கண்ணம்மாவை சமாதானப் படுத்தும் இந்த படலம் தற்போது விறுவிறுப்பாகி வருவதாக இந்த சீரியல் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Kannamma reaction for Bharathi Shiva Shakthi Drama

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma New Promo, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Sertial today episode, Bharathi Kannamma Sertial today Promo will find this news story useful.