Bharathi Kannamma : "ஒரு DNA டெஸ்ட் எடுக்க 10 வருஷமா?".. RESULT -க்கு முன் பாரதியை கழுவி ஊற்றிய டாக்டர்.!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய எபிசோடு பரப்பாகி வருகிறது.

Also Read | விஜய் நடிக்கும் 'வாரிசு'.. தெறி ஸ்டைலில் வெளியான புதிய போஸ்டர்!
பாரதி தனது மனைவி மீதான சந்தேகத்தால் பிரிந்து வாழ்ந்துவரும் சூழலில், வெண்பாவின் சூழ்ச்சியில், பாரதி வெண்பாவை திருமணம் முற்பட்டார். ஆனால் அதில் வெண்பாவின் சூழ்ச்சி தெரியவர, வெண்பாவுக்கு ரோஜித்துடன் திருமணம் ஆகிவிட்டது. இதனிடையே பாரதியின் இந்த முடிவால், அவரை அவரது குடும்பம் மற்றும் பாரதியிடம் வளர்ந்து வந்த குழந்தை ஹேமா அனைவருமே பாரதியை வெறுத்து விட்டனர்.
இதனிடையே குழந்தை ஹேமா தான் ஒரு வளர்ப்பு பிள்ளை என்பதால் தன்னை ஆசிரமத்தில் கொண்டு விடச் சொல்லி அனைவரையும் வற்புறுத்த அப்போது கண்ணம்மா, "நீ எனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை தான். உன்னை யாரும் ஆசிரமத்தில் தூக்கிக் கொண்டு விட்டு விட்டார்கள். அதன் பிறகு உன்னை உன் தந்தை எடுத்து வளர்த்தார். மற்றபடி நான் தான் உன் அம்மா" என உண்மையை போட்டு உடைத்து விட்டார்.
இன்னொரு பக்கம் பாரதையோ டி.என்.ஏ சாம்பிள்களை கொடுத்திருந்தார். அதற்கான ரிசல்ட் வருவதற்காக காத்திருக்கிறார். ரிசல்ட் வந்து விட்டால் பாரதியின் சந்தேகங்கள் தீர்ந்து மனைவி கண்ணம்மாவுடனும் தன் இரு குழந்தைகளுடனும் ஏற்று குடும்பமாக வாழ்ந்தாக வேண்டும் என்கிற நிலை அவருக்கு இருந்தது. இன்னொரு பக்கம் வெண்பாவுக்கு ரோஜித் என்னும் கேரக்டருடன் திருமணம் ஆகிவிட்டது. ஆனாலும் வெண்பா எப்படியேனும் பாரதியை அடைய நினைக்கிறார். இந்த நிலையில் பாரதியின் டி.என்.ஏ சாம்பிள் ரிசல்ட்ஸ் வந்துவிட்டதாக அவரிடம் டாக்டர் சொல்லக்கூடிய காட்சிகள் எபிசோடில் வெளியாகியுள்ளன.
இதில் பாரதியிடம் பேசும் டாக்டர், “என்ன காரணத்துக்காக நீங்கள் இந்த டெஸ்ட் எடுக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்கிறார். மேலும் தனது மகன் போல் பாரதி இருப்பதாகவும், அதனால் அக்கறையில் கேட்பதாகவும் பாரதியிடம் அவர் குறிப்பிட்டு கேட்க அப்போது பாரதி தன் தரப்பு விளக்கத்தை டாக்டரிடம் சொல்லுகிறார். அதன்படி திருமணத்துக்கு முன்பு தமக்கு நடந்த விபத்தால், தான் குழந்தை பாக்கியத்தை இழந்ததாகவும், அந்த விஷயம் தன்னுடைய மனைவிக்கு தெரியாது என்றும் கூறிய பாரதி அதே சமயம் மனைவிக்கு பிறந்த குழந்தைகளுக்கு, தான் எப்படி தகப்பனாக முடியும் என்கிற குழப்பம்தான் தனக்கு இருக்கிறது என்றும், தன்னுடைய குடும்பத்தினர் இதை நம்ப மறுத்து, தான் சொல்வதை ஏற்க மறுப்பதாகவும் டாக்டரிடம் உருக்கமாக தெரிவித்தார்.
மேலும் தன்னுடைய மனைவி கண்ணம்மா நல்லவர் என்றும் எனவே ஆரம்ப காலத்தில் அவரை தப்பாக நினைத்ததாகவும் எனினும் தன் தரப்பில் தவறு இருக்குமோ என்கிற யோசனை உள்ளுணர்வில் வந்து போவது சமீபத்தில் அதிகரித்து விட்டதாகவும் அதனால் இந்த டெஸ்டை எடுத்ததாகவும், தன்னுடைய ரிசல்ட்டை, தான் தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் கூறி வேண்டுகோள் விடுத்தார். இதற்கு டாக்டரோ, “பெற்ற அப்பாவாக நீங்கள் இருக்கும் பொழுது குழந்தைகளின் டி.என்.ஏ எப்படி உங்களுடன் மேட்ச் ஆகாமல் இருக்கும்?” என்று கூறுவதன் மூலம் குழந்தை ஹேமா மற்றும் குழந்தை லட்சுமி ஆகிய இருவருக்கும் பாரதி தான் அப்பா என்கிற உண்மையை டாக்டர் பாரதியிடம் உடைத்துக் கூறுகிறார்.
மேலும் பேசியவர், “இத்தனை வருடமாக உங்கள் மனைவியை நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந்ததாக நீங்கள் சொன்னது உண்மைதான். நீங்கள் அவரை தவறாகதான் நினைத்துக் கொண்டிருந்தீர்கள். ஏன் டாக்டர் பாரதி? ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுப்பதற்கு உங்களுக்கு பத்து வருஷம் தேவைப்பட்டது? ஆரம்பத்திலேயே எடுத்திருக்கலாமே? உங்கள் வாழ்க்கையில் ஒரு பத்து வருடத்தை வேஸ்ட் செய்து விட்டீர்களே? ” என்று சரமாரியாக கேட்டவர், “உங்கள் திருமணத்திற்கு முன்பாக வேண்டுமானால் உங்களுக்கு அடிபட்டதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியம் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் பிற்காலத்தில் அது சரியாகிருக்கும். அதை நீங்கள் பரிசோதிக்காமல் பழியை உங்கள் மனைவி மீது போட்டு விட்டீர்கள்! உங்கள் மனைவி மீது எந்த தவறும் இல்லை. குழந்தைகள் உங்களுக்கு பிறந்தவர்கள்தான். இந்த ரிப்போர்ட்டை பாருங்கள்” என்று ரிப்போர்ட் கொடுக்கிறார்.
இதன் பிறகு பாரதி பீல் பண்ணி அழத் தொடங்குகிறார். நீண்ட வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த டிஎன்ஏ ரிசல்ட், இந்த காட்சியில் உடைபடுகிறது. எனவே அடுத்தடுத்து பாரதி கண்ணம்மாவில் நிகழ போவது என்ன என்பது குறித்து ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
Also Read | ஜனனி எதுக்காக உடைந்து அழுதார்? அப்படி என்னதான் அசீம் சொன்னாரு? போட்டு உடைத்த ஷிவின்.! bigg boss 6