www.garudabazaar.com

குடும்பத்துடன் துபாயில் சுற்றுலா.. சாயிஷா வெளியிட்ட ஆர்யா & குழந்தையின் CUTE PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா & சாயீஷா தங்களது குடும்பத்துடன் துபாயில் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர்.

Arya Sayyesha tour along with daughter Ariana in dubai

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனான நடிகர் ஆர்யா, ‘வனமகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சாயீஷாவை,  காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டில் திருமணம் செய்தார்.

Arya Sayyesha tour along with daughter Ariana in dubai

கஜினிகாந்த்’ திரைப்படத்தில் இணைந்து நடித்த ஆர்யா-சாயீஷா இடையே காதல் மலர்ந்ததையடுத்து, இருவீட்டார் சம்மதத்துடனும் இவர்களது திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது.

தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த பெண் குழந்தைக்கு ஆரியானா என பெயரிட்டனர். சமீபத்தில் குழந்தையின் புகைப்படத்தையும் ஆர்யா சாயீஷா தம்பதியர் வெளியிட்டனர்.

Arya Sayyesha tour along with daughter Ariana in dubai

ஆர்யா & சயீஷா தற்போது துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எடுத்த வீடியோக்கள் & புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சயீஷா பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குழந்தை ஆரியானா & ஆர்யா மற்றும் குடும்பத்தினர் இடம்பெற்றுள்ளனர். மிராக்கிள் கார்டனில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Arya Sayyesha tour along with daughter Ariana in dubai

டெடி, சார்பட்டா பரம்பரை மற்றும் கேப்டன் படங்களை தொடர்ந்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார்.

Arya Sayyesha tour along with daughter Ariana in dubai

இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)

தொடர்புடைய இணைப்புகள்

Arya Sayyesha tour along with daughter Ariana in dubai

People looking for online information on Arya, Dubai, Sayeesha will find this news story useful.