விஜய் சேதுபதியின் மிரட்டலான லுக்கில் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான புது போஸ்டர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் சேதுபதி தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க, ராம்ஜி இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தை 7C's எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து விஜய் சேதுபதி தனது விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறார்.