www.garudabazaar.com

அட.. நம்ம கனகாவா இது?.. “இந்த வயசுல இப்படி ஒரு ஆசையானு..”.. உருக்கமான Video.. நெகிழும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் கங்கை அமரன் இயக்கிய ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் தமிழ் திரையுலகில் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படம்.

kanaga wants to act again her emotional video கனகா நடிகை

நடிகர் ராமராஜன், கனகா நடித்த இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். கரகாட்டக் கலை மற்றும் கரகாட்டக் கலைஞர்களை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தில் அனைவராலும் அறிந்து கொள்ளப்பட்ட முக்கிய நடிகை கனகா.

இதனைத்தொடர்ந்து கனகா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். ஹீரோயினாக மட்டுமே நடித்திருந்த கனகா வேறு எந்த ரோல்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்த நிலையில் பல வருடம் கழித்து கனகா மனம் திறந்துள்ளார். இது தொடர்பாக அவர் தற்போது பதிவிட்ட வீடியோ ஒன்றில் தனக்கு மீண்டும் நடிக்க நடிக்கிற ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதேசமயம், “தொடர்ந்து 10 வருடமாவது ஃபீல்டில் இருந்தால் மட்டும்தான் சமாளிக்க முடியும்.. பல வருடங்கள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்ததால் எல்லாவற்றையுமே புதிதாக கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும் .. ஆனால் சக மாணவியாக உங்களுடன் இணைந்து கற்றுக்கொண்டு, நான் கற்றுக்கொண்டதை உங்களுக்கும் பகிர விரும்புகிறேன்.

எனினும் சிலர் இந்த வயசுல இவளுக்கு எதுக்கு இந்த ஆசை என்றெல்லாம் கேட்பார்கள்.. ஆனால் என்னை மீண்டும் நடிக்க அழைத்தால், நான் ஒப்பனை, காஸ்டியூம், எப்படி பேசவேண்டும் என பல விஷயங்களிலும் இன்றைக்கு இருப்பது போல் கற்க வேண்டியது உள்ளது.

இதுபற்றி உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய விமர்சனங்களையும் நீங்கள் முன் வைக்கலாம். அவற்றிலிருந்தும் நான் கற்றுக் கொள்வேன்” என்று பேசியிருக்கிறார்.

கனகாவின் இந்த உருக்கமான பேச்சை பார்த்த பலரும், “நீங்க நடிக்க வாங்க மேடம்” என குறிப்பிட்டதுடன், இன்னும் பலர் கனகாவின் ரசிகர்களாக இருப்பதாக கமெண்டுகளில் குறிப்பிட்டு வருகின்றனர்.

அட.. நம்ம கனகாவா இது?.. “இந்த வயசுல இப்படி ஒரு ஆசையானு..”.. உருக்கமான VIDEO.. நெகிழும் ரசிகர்கள்! வீடியோ

Tags : Kanaga

kanaga wants to act again her emotional video கனகா நடிகை

People looking for online information on Kanaga will find this news story useful.