ரியாலிட்டி ஷோவில் கண் கலங்கிய நிஷா, போஸ் வெங்கட் மனைவி... என்ன ஆச்சு?.. உருக்கமான ப்ரோமோ!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு மக்களிடையே மிகவும் பிரபலம்.
டிவி சீரியல்களுக்கு ஒருபக்கம் விஜய் டிவியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தாலும் இன்னொரு பக்கம் ரியாலிட்டி ஷோக்களும் ட்ரெண்டாக இருந்து வருகிறது. இந்த ரியாலிட்டி ஷோக்கள் விஜய் டிவியில் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல் அவ்வப்போது உணர்வுபூர்வமான பல விஷயங்களையும் தொட்டுச் செல்கிறது.
அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள ஸ்டார் கிட்ஸ் என்னும் ஒரு நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய நடிகை அறந்தாங்கி நிஷா, பிரபல பாடகி ராஜலட்சுமி, நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவி சோனியா மூவரும் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியாத நெருக்கடியை குறிப்பிட்டு உருக்கமாக பேசியிருக்கின்றனர். இந்த புரோமோ தான் தற்போது வெளியாகி இருக்கிறது.
இதில் பேசிய அறந்தாங்கி நிஷா, தன்னுடைய பெண் குழந்தை தன்னிடம் வருவதே இல்லை என்று கண்கலங்குகிறார். இன்னொரு புறம் பேசிய ராஜலட்சுமி, தானும் தன் கணவரும் நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விடுவதால் குழந்தைகளை விட்டு விட்டு செல்லக் கூடிய சூழல் உருவாகிறது என்றும் குறிப்பிட்டு கண்கலங்கினார்.
போஸ் வெங்கட்டின் மனைவி சோனியா பேசும்போது மிகவும் விரும்பி, பெண் குழந்தையை பெற்றுக் கொண்டதாகவும், ஆனால், தான் அவளுக்கு தாயாக இருப்பதில்லை என்றும் அவள்தான் தனக்கு தாயாக இருப்பதாகவும் கூறி அழ தொடங்குகிறார். உடனே சோனியாவின் மகளும் சேர்ந்து அழுவதை இந்த புரோமோவில் காணமுடிகிறது.
விரைவில் வெளியாக இருக்கும் இந்த நிகழ்ச்சியின் புரோமோவில் ஜாலியான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தாலும், இதில் கலந்து கொண்டுள்ள செலிபிரிட்டி தங்களுடைய வேதனைகளை உருக்கமாக பேசியிருப்பதும் இடம்பெற்றுள்ளது. இந்த புரோமோவின் முடிவில் விஜய் டிவி ராமர், ஈரோடு மகேஷ், விஜே பிரியங்கா பலரும் கண்கலங்குவதை காணமுடிகிறது.
Also Read: 'ஷாக்' ஆன ரசிகர்கள்!.. பிரபல சீரியலின் இந்த கேரக்டரில் இனி நடிக்கப் போவது இவரா?
ரியாலிட்டி ஷோவில் கண் கலங்கிய நிஷா, போஸ் வெங்கட் மனைவி... என்ன ஆச்சு?.. உருக்கமான ப்ரோமோ! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- TRENDING: Samantha's Latest Sarcastic Post About 'media Reports' Is Taking Internet By Storm - What Happened
- Dhanush Simbu Arivu Dhee Yuvan Bday Trending தனுஷ் சிம்பு
- TRENDING: Are These The Next Set Of Contestants For Bigg Boss Tamil Season 5? Here's What We Know
- TRENDING: Spiderman: No Way Home Trailer OUT; Look Which Villain Just Joined The Madness
- LATEST And TRENDING: 'Valimai' Tops Twitter Trends; Check Out Where Vijay's 'Master' Stands? - Fans Excited
- TRENDING: Music Composer For 'Thala 61' Locked? Ace Composer's Tweet Goes Viral
- Sivaangi's Next Project Announcement VIDEO Is Trending Now Ft Ashwin Kumar, Kushee Ravi
- Actor Mayilsami Gifted Petrol To Marriage Couple Viral Trending
- Vignesh Shivan's Interesting Virtual Appearance With Vijay And MS Dhoni Despite Being Absent Is Trending
- Thalapathy Vijay Thala Ms Dhoni Meet Gokulam Studios Trending
- A 'never Seen' Emotional Speech VIDEO Of Radikaa Sarathkumar Is Super-trending
- After Vanitha, Another Bigg Boss Fame Joins Arjun Das' Next With Vasanthabalan Ft Aranthangi Nisha And Bava Lakshmanan
தொடர்புடைய இணைப்புகள்
- "பெண் குழந்தை வேணும்னு ரொம்ப ஆசையா பெத்தேன், ஆனா.." கண் கலங்கிய Nisha, BOSE VENKAT மனைவி
- Rombha Sportive Ah Irukanga Ya 😂❤#AranthangiNisha #Handbag #Throwback #BehindwoodsMemes
- Sariyaana Adi 😂❤ #AranthaiNisha #Fun #Throwback #BehindwoodsMemes
- Archuma-க்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு...Zaara Reveals
- Alya And Nisha SCARED 😨 REAL GHOST ENCOUNTER👻காட்டுக்குள் வழிமாறி போய் கடுப்பான NISHA | EP 02
- நீங்க எனக்கு இன்னொரு அம்மா 🥺 - Emotional ஆன ZAARA
- "Archana அம்மா Thighs-ல இருந்து சதை எடுத்து…." Zaara Explains About Archana's Surgery
- நீ வேணா சண்டைக்கு வாடா !! நாயுடன் சண்டை செய்யும் மைனா...வைரலாகும் CUTE வீடியோ | TrendingViralVideo
- “Achuma-காக Pray பண்ணுங்க, அவங்க இப்போ..” Zaara & Anita Gets Emotional | Archana
- கவலை படாதீங்க அக்கா....எங்களோட Prayers எப்போமே இருக்கும் ❤️ ..Celebrities Gets Emotional
- Surgery-கு பிறகு Archana-வின் தற்போதைய உடல்நிலை என்ன? Zaara & Anita கொடுத்த Clarification
- "இன்னும் 1 Month-க்கு என்னால..."- OPERATION Theater-ல் கண்கலங்கிய ARCHANA!