#FRIDAYFITNESS வெறித்தனமா இருக்கே…. ‘விக்ரம்’ படத்தின் latest வைரல் வீடியோ…

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் புதிய வீடியோ துணுக்கை படக்குழுவினர் வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.

kamal Vikram movie new glimpse video released

பேன் இந்தியா ‘விக்ரம்’…

கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகி வரும் ‘விக்ரம்’திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளியில் கமலின் அடுத்த படமாக இந்த திரைப்படம் ரிலீஸாவதால் படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

kamal Vikram movie new glimpse video released

வெளியீடு…

தமிழில் விக்ரம் திரைப்படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸ் வெளியிடுகிறது. தெலுங்கில் ஸ்ரேஷ்த் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தியில் பென் ஸ்டுடீயோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வெளிநாட்டு உரிமையை ap இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தின் வியாபாரம் நடந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

kamal Vikram movie new glimpse video released

புதிய ப்ரோமோ..

படத்தின் ரிலீஸ் நெருங்கியுள்ள நிலையில் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு படத்துக்கான ப்ரமோஷன்களை நடிகர் கமல்ஹாசன் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது படத்தின் புதிய ப்ரமோஷன் வீடியோவை வெளியிட்டுள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள ஹிட் பாடலான ‘wasted’ பாடலின் இசையோடு 24 வினாடிகள் இடம்பெறும் அந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி, நரேன், பஹத் பாசில் மற்றும் கமல்ஹாசன் சம்மந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து இந்த புதிய ப்ரோமோ தற்போது ரசிகர்களுன் கவனத்தைப் பெற்று வருகிறது.

kamal Vikram movie new glimpse video released

தொடர்புடைய இணைப்புகள்

kamal Vikram movie new glimpse video released

People looking for online information on Fahad Fassil, Lokesh, Vijay Sethupathi, Vikram will find this news story useful.