விஜய், அஜித் முதல் விஜய் சேதுபதி வரை..! ஹீரோக்களுக்கு கமல் வைக்கும் வேண்டுகோள் என்ன தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து முக்கியமான பதிவை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் குறித்து கமல் பதிவு | kamal tweets about corona virus issue tagging all stars of tamil.

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என புகழப்படுபவர் கமல். தனது வித்தியாசமான சினிமா படைப்புகளால் தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை இவர் பெற்றிருக்கிறார். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'கொரோனா விஷயத்தில் பிரதமர் எடுத்த முடிவில் நான் உறுதியாக நிற்கிறேன். இந்த மாதிரியான சூழ்நிலையில் நாம் ஒன்றாக நிற்க வேண்டும். இதையடுத்து நாம் வீட்டிற்குள் பத்திரமாக இருக்க வேண்டும். நான் எனது நண்பர்கள், ரசிகர்கள் அனைவரையும் மார்ச் 22 அன்று காலை 7 முதல் 9 வரை இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவில், நடிகர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்களை அவர் டேக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor